கொம்ப்யூட்டர் போன்ற தோற்றத்தில் புதிய டேப்லட்

Loading...

கொம்ப்யூட்டர் போன்ற தோற்றத்தில் புதிய டேப்லட்குறைந்த விலை கொண்ட டேப்லட்டை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஃபன்டேப் ஃபிட் டேப்லட் சிறப்பாதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

டெல்லியை சேர்ந்த நிறுவனமான கோ டெக், ஃபன்டேப் ஃபிட் என்ற புதிய டேப்லட்டை வெளியிட்டுள்ளது. இந்த டேப்லட் 7 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இந்த திரை தகவல்கள், புகைப்படங்கள் என்று எதையும் தெளிவாக பார்க்க உதவும்.

ஆனால் இது வித்தியாசமான டேப்லட் என்று தான் சொல்ல வேண்டும். இந்த டேப்லட் பிசி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபன்டேப் ஃபிட் டேப்லட் குறைந்த விலையாக இருப்பதோடு மட்டும் அல்லாமல், அனைவரும் எதிர்பார்க்கும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயங்கும்.

விலையும் குறைந்ததாக இருக்க வேண்டும், அதே சமயம் அதற்கு ஏற்ப வகையில் சிறந்த தொழில் நுட்ப வசதியினையும் வழங்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனால் இந்த டேப்லட்டின் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிறப்பாக இயங்க இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த டேப்லட்டில் இன்னும் ஒரு முக்கிய விஷயம் என்வென்றால், உடல் நலத்ததினை பாதுகாத்து கொள்ள சில சிறந்த வழிகளை காட்டும் வகையில் பல புதிய அப்ளிக்கேஷன்களையும் டவுன்லோட் செய்யலாம்.

வீடியோ சாட் வசதிக்காக இதில் 0.3 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. இது குறைந்த மெகா பிக்ஸல் கொண்ட கேமரா தான். ஆனால் படங்கள் பார்க்க இந்த டேப்லட்டில் உள்ள 3,600 எம்ஏஎச் பேட்டரி 4 மணி நேரம் உழைக்கும்.

மியூசிக் ப்ளேபேக் வசதிக்கு இந்த பேட்டரி 8 மணி நேரம் உழைக்கும். கோ டெக் நிறுவனத்தின் இந்த ஃபன்டேப் ஃபிட் என்ற இந்த டேப்லட் சிறப்பாக வைபை வசதிக்கும் சப்போர்ட் செய்யும்.

7 இஞ்ச் திரையில் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும் இந்த ஃபன்டேப் ஃபிட் என்ற இந்த டேப்லட் ரூ. 5,999 பட்ஜெட் விலை கொண்டது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply