கைப்பேசி செயலியிலும் கால் பதித்துள்ள நாம் தமிழர்

Loading...

கைப்பேசி செயலியிலும் கால் பதித்துள்ள நாம் தமிழர்தமிழகத்தில் சட்டசபை தோ்தல் நெருங்குவதை முன்னிட்டு, பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகள் பிரசாரத்திற்காக தொழில்நுட்பத்தினை நாடி வருகின்றன.

அந்த வரிசையில், தமிழர் தான் தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற முக்கிய கொள்கை கொண்ட சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் இணைந்துள்ளது.

அக்கட்சியின் செயல்பாட்டு வரைவுக்கென மட்டுமே ஒரு சிறப்பு ஆண்ட்ராய்டு கைப்பேசி செயலியை வெளிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு-2016 என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அச்செயலியில், நாம் தமிழர் கட்சியின் திட்டங்கள் மற்றும் தொலை நோக்கு பார்வையை விளக்கும் 330 பக்க செயற்பாட்டு வரைவு புத்தகம், நீர்வளம், கல்வி, மருத்துவம், வேளாண்மை, பொருளாதாரம் மற்றும் மரபு சார்ந்த மின்சாரம் போன்ற அத்தியாவசிய பிரச்சினைகளில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் ஒருங்கே கோர்க்கப்பட்ட வரைவாக வெளியிடப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்ய – https://play.google.com/store/apps/details?id=com.ranup.double.candle

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply