கூகுள் தேடலில் மற்றுமோர் அதிரடி வசதி

Loading...

கூகுள் தேடலில் மற்றுமோர் அதிரடி வசதிஇணைய தேடலில் கூகுளிற்கு நிகராக இதுவரை வேறு சேவைகள் இல்லை என்றே சொல்லலாம்.

அந்த அளவிற்கு துல்லியமான, விரைவான தேடலை தருவதுடன் பரந்துபட்ட விடயங்களை தேடக்கூடியதாகவும் இருக்கின்றது.

ஆனாலும் கூகுள் நிறுவனம் தனது சேவையில் மென்மேலும் பல மேம்படுத்தல்களை தொடர்ச்சியாக ஏற்படுத்திவருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது ஒன்லைன் மூலம் ஒளிபரப்பப்படும் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தேடித்தரும் வசதியே அதுவாகும்.

உதாரணமாக குறித்த ஒரு நிகழ்ச்சியினை பார்வையிட வேண்டும் எனில் அந் நிகழ்ச்சிக்கான பெயரை வழங்கினால் போதும் எந்தெந்த இணையத்தளங்களில் அவற்றினை நேரடியாக பார்வையிட முடியும் என்ற தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.

இணையத்தளங்களை மட்டுமன்றி ஒன்லைன் ஊடாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கக்கூடிய அப்பிளிக்கேஷன்களையும் ஒருங்கு சேர தேடி தருகின்றமை விசேட அம்சமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply