கூகுளின் நெக்சஸ் 7 டேப்லெட்

Loading...

கூகுளின் நெக்சஸ் 7 டேப்லெட்கூகுள் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் புதிய நெக்சஸ் 7 டேப்லெட்டை அறிமுகம் செய்து வைத்தது. இந்திய ஆன்ட்ராய்டு ரசிகர்கள் இந்த டேப்லெட்டுக்காகத் தவமிருந்து காத்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் இந்த டேப்லெட் குறைந்த விலையில் அதாவது ரூ.11,200க்கு விற்பனைக்கு வருகிறது.

இந்த சாதனம் முதலில் ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அது செப்டம்பர் அல்லது அக்டோபரில் வரும் என்று ஆசஸ் அறிவித்தது. தற்போது இந்த நெக்சஸ் டேப்லெட் கண்டிப்பாக நவம்பர் மாதத்திற்கு முன் இந்திய சந்தைக்கு வந்துவிடும் என்று ஒரு நம்பகமான தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

இந்த டேப்லெட் என்விடியா டேக்ரா 3 ப்ராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வர இருக்கிறது. இந்தியாவில் இந்த நெக்சஸ் டேப்லெட் வெற்றி பெறும் என்று நம்பலாம்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply