கூகுளின் அன்ரோயிட்டில் வருகிறது அப்பிளின் ஆதிக்கம்

Loading...

கூகுளின் அன்ரோயிட்டில் வருகிறது அப்பிளின் ஆதிக்கம்அப்பிள் நிறுவனமானது மடிக்கணினி, மேக் கணினி உட்பட மொபைல் சாதன வடிவமைப்பில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வருகின்றது.

இவ்வாறன நிலையில் கடந்த 2014ம் ஆண்டில் இடம்பெற்ற Worldwide Developer மாநாட்டின்போது Swift எனும் புரோகிராமிங் மொழியின் பீட்டா பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது.

C எனும் கனிணி மொழிக்கு சிறந்த பிரதியீடாக அமையும் இப் புதிய கணினி மொழியினை கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய வகையில் (Open Source) மாற்றியமைத்திருந்தது.

இதேவேளை இதுவரை காலமும் தனது அன்ரோயிட் இயங்குதள வடிவமைப்பில் ஜாவா மொழியினைப் பயன்படுத்தி வந்த கூகுள் நிறுவனம் அப்பிளின் Swift மொழியானது கணினி மொழிகளில் முதற்தர மொழி என்பதை கண்டறிந்துள்ளது.

இதன்காரணமாக தனது அன்ரோயிட் இயங்குதளம் மற்றும் அப்பிளிக்கேஷன்களின் வடிவமைப்பில் இம் மொழியினை பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply