குற்றங்களை துப்புத்துலக்கும் பேஸ்புக் வலைத்தளம்

Loading...

குற்றங்களை துப்புத்துலக்கும் பேஸ்புக் வலைத்தளம்இன்றைக்கு பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக வலைத்தளங்கள் இளைஞர்களுக்கிடையே அவசியமான தொடர்பு தளங்களாக இருக்கின்றன. இதுவே பல்வேறு குற்றங்களுக்கும், குற்றங்களை துப்புத்துலக்கவும் காரணிகளாக இருக்கின்றன.

காதலிக்காக, நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த கொலை செய்த குற்றவாளியை காட்டிக்கொடுத்து அவனை உலகறியச் செய்தது பேஸ்புக்தான். இதனை ஜீ தமிழின் ‘க்ரைம் பேட்ரல்’ நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்பினார்கள். பிரபல தொலைக்காட்சி நடிகர் அனுப் சோனி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, குற்ற சம்பவங்களையும், அதைத் தொடர்ந்து நடைபெறும் புலன் விசாரணைகளையும் திகிலுடன் காட்சிப்படுத்தி உள்ளனர்.

கொடூர குற்றச் செயல்கள் மற்றும் அதிர வைக்கும் குற்றச் சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை விவரிக்கும் இந்த க்ரைம் தொடர் ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அதையும் மீறி ஆங்காங்கே குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு குற்றமும் ஒரு சிக்னலை கொடுக்கும் அதை கண்டறிந்து தடுக்க முயற்சி செய்தால் கொலையையும், குற்றங்களையும் எளிதாக தடுத்து விடலாம் என்பதையே இந்த நிகழ்ச்சி உணர்த்தியது.

இந்தி தொடரை டப்பிங் செய்திருப்பதுதான் கொஞ்சம் உறுத்தலாக உள்ளது. மற்றபடி அழுகை தொடர்களையும், கத்தல் காட்சிகளையும் பார்த்து சலித்துப்போனவர்களுக்கு இது சுவாரஸ்யமான க்ரைம் தொடர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply