கியூவெர்ட்டி கீபோர்டுடன் வேகமாக இயங்கும் ரைய்ஸ் ஸ்மார்ட்போன்

Loading...

கியூவெர்ட்டி கீபோர்டுடன் வேகமாக இயங்கும் ரைய்ஸ் ஸ்மார்ட்போன்3 மாதங்களுக்கு முன்பு கியோசெரா நிறுவனம் இரண்டு ஆன்ட்ராய்டு போன்களைக் களமிறக்கியது. இந்த சாதனங்கள் முறையே கியோசெரா ஹைட்ரோ மற்றும் கியோசெரா ரைய்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன.

3.5 இன்ச் எச்விஜிஎ தொடுதிரை மற்றும் 3.2எம்பி கேமரா ஆகிய வசதிகளுடன் வரும் ரைய்ஸ் போன் நடுத்தர போன்கள் வகையைச் சேர்ந்தது. சற்று அதிக எடையுடன் வரும் இந்த போன் உறுதியாக இருக்கும். இதன் தொழில் நுட்ப வசதிகள் உண்மையாகவே சூப்பராக இருக்கும்.

இதன் பின்பக்கத்தில் உள்ள 3.2எம்பி கேமரா ப்ளாஷ் மற்றும் சிறிய வேனிட்டி மிரர் ஆகிய வசதிகளுடன் வருகிறது. மேலும் இந்த போன் சிறிய ஆடியோ ஸ்பீக்கரையும் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு வசதிகளுக்காக யுஎஸ்பி போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆகியவையும் உள்ளன.

இந்த போன் க்யூவெர்ட்டி கீபோர்டுடன் வருகிறது. இந்த கீபோர்ட் சூப்பராக இருக்கிறது. இந்த கீபோர்டில் வேலை செய்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த ரைய்ஸ் போன் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸருடன் வருகிறது. அதனால் இது வேகமாக இயங்கும் என்று நம்பலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply