காளான் லொலிபொப்

Loading...

காளான் லொலிபொப்
தேவையான பொருட்கள் :

பட்டன் காளான்- 10

சோள மா – 2 டேபிள்ஸ்பூன்

மைதா மா – 2 டேபிள்ஸ்பூன்

அரிசி மா – 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

தக்காளி சோஸ் – 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

பெருங்காயத்தூள் – சிறிது

எலுமிச்சைச்சாறு – 1/2 மூடி

மசாலா தூள் – 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 10-15

சோம்பு – 1 டீஸ்பூன்

ஃபுட் கலர் – விருப்பமானது


செய்முறை :

சின்ன வெங்காயம் தோல் உரித்து, அரிந்து மிக்ஸியில் சோம்பு சேர்த்து தண்ணீர் சிறிது தெளித்து நைஸாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு இந்த அரைத்த விழுதை வதக்கி, தக்காளி சோஸ், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். மூன்று மாவுடன் பெருங்காயத்தூள், மசாலா தூள், விருப்பமான ஃபுட் கலர் போட்டு கிளறி இதில் வதக்கிய மசாலாவைப் போட்டு கிளறி இறக்கி வைத்து எலுமிச்சைச்சாறு பிழியவும்.

இதில் காளானைப் போட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு சூடான எண்ணெயில் காளானைப் போட்டு பொரித்தெடுக்கவும். நறுக்க வேண்டாம்.

வெந்த காளான் அடியில் டூத் பிக் அல்லது லொலிபொப் ஸ்டிக் சொருகி குழந்தைகளுக்கு தரலாம்.

சத்துள்ள வித்தியாசமான ஸ்நக்ஸ் இது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply