காளான் ஃப்ரைட் ரைஸ்

Loading...

காளான் ஃப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப்
பட்டன் காளான் (நீளமாக நறுக்கியது) – 1 கப்
பழுப்பாக்கிய (Caramelized sugar) சீனி – 1 டேபிள்ஸ்பூன்
சோயா சோஸ் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா 1 டீஸ்பூன்
வெங்காயத்தாள் -1 டேபிள்ஸ்பூன்
முட்டைக்கோஸ் நீளமாக நறுக்கியது – 1/2 கப்


செய்முறை :

அடிகனமான பெரிய பாத்திரத்தில் அரிசிக்கு தேவையான நீர், உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக நீர் கொதித்தவுடன் அரிசியைக் கழுவி போடவும். முக்கால் பதம் அரிசி வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

தண்ணீர் பாத்திரத்தில் இருந்தாலும் பரவாயில்லை. வடிகட்டி விடவும். சாதத்தை அகலமான தட்டில் கொட்டி உதிர்த்து விட்டு ஆறவிடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முட்டைக்கோஸ், காளான், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு வதக்கி சாதத்தில் கொட்டவும்.

பழுப்பாக்கிய சர்க்கரையை சாதத்தில் சேர்க்கவும். சாதத்தை குறைந்த தணலில் வைத்து சோயா சோஸ் சேர்த்து வதக்கவும்.

கடைசியாக வேண்டுமானால் வெங்காயத்தாள் சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply