காலையில் உண்ண வேண்­டிய உண­வுகள்

Loading...

காலையில் உண்ண வேண்­டிய உண­வுகள்காலை உணவை தவிர்ப்­பதால் பல ஆரோக்­கிய பிரச்­ச­னை­களை நாம் சந்­திக்­க­கூடும்.

ஆனால், இன்­றைய நவீன உலகில் காலை உணவை தவிர்க்கும் இளைய தலை­மு­றை­யி­னர்கள் ஏராளம்.

அவ்­வாறு நாம் காலை உணவை எடுத்­துக்­கொள்ளும் பட்­சத்தில் அந்த உணவு சரி­வி­கித உண­வாக இருக்க வேண்டும்.

குறிப்­பாக, காலையில் மூன்று வகை­யான உண­வுகள் இடம் பெற்றால் மூளையின் ஆற்றல் நன்­றாக இருக்கும் என ஆய்வின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.மூன்று வகை உண­வுகள்:

1. முழுத்­தா­னிய உணவால் செய்­யப்­பட்ட சாண்ட்விச், பாலா­டைக்­கட்டி, ஆப்பிள், அல்­லது

2. தக்­காளித் துண்­டுகள், கோதுமை சாப்­பாத்தி, காய்­கறி அவியல், தயிர் ஒரு கோப்பை அல்­லது

3. கோதுமை ரவை, பால், பழத்­துண்­டுகள்

என்று எளி­மை­யாக இருந்தால் போதும். பழங்­களைத் தெரிவு செய்­யும்­போது மட்டும் விட்­டமின் சி தாரா­ள­மாக உள்ள பழங்­க­ளையே தெரிவு செய்­யவும்.
ஏனென்றால், விட்­டமின் சி இருந்­தால்தான் வளர்­சிதை மாற்றம் விரை­வாக நடந்து மூளைக்கும் ஆக்­ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும்.

ஆப்பிள் உட்­பட எந்த ஒரு பழமும் காலையில் சாப்­பி­ட­வில்லை என்றால் பர­வா­யில்லை. தக்­காளிப் பழம் ஒன்றை அவ­சியம் சாப்­பி­டவும்.

இதில் விட்­டமின் சி தாரா­ள­மாக இருக்­கி­றது.

இட்லி, தோசை, சம்பா ரவை, சோள­வ­றுவல், தவிடு நீக்­காத கோது­மையில் செய்த சப்­பாத்தி, கேழ்­வ­ரகு ரொட்டி, பொங்கல் போன்ற முழுத் தானிய உண­வுகள் மூலம் கிடைக்கும்.

மாவுச்­சத்தும், பால், தயிர் போன்­ற­வற்றின் மூலம் கிடைக்கும் சுண்­ணாம்புச் சத்தும் முறையே மூளை­யையும், நரம்பு மண்­ட­லத்­தையும் அமை­திப்­ப­டுத்தி ஆற்­ற­லுடன் செயல்­பட வைக்­கி­றது.

காய்­க­றி­களில் மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் விட்­ட­மின்­களும் மூளையைத் துடிப்­புடன் செயல்­பட உத­வு­கின்­றன.

அன்­னாசிப் பழத்­துண்­டுகள், பப்­பாளித் துண்­டுகள் என்று சாப்­பி­டலாம். இவை உடனே செரி­மானம் ஆக உதவும். இல்­லையேல் மிக எளிய வழி, எலு­மிச்சம் பழச் சாறுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்­து­வது.

காலை உணவில் பால் அல்­லது தயிர் சேர்த்துக் கொண்டால் பழத்­துண்­டு­க­ளாகச் சாப்­பி­டலாம்.

பழச்­சா­றாக அருந்­தினால் பாலா­டைக்­கட்டி சேர்க்­கலாம்.

அல்­லது முதலில் தயிர் அல்­லது பால் சாப்­பிட்­டு­விட்டு, இரண்­டா­வ­தாக முழுத்­தா­னிய உணவு, மூன்­றா­வ­தாக பழம் அல்­லது பழச்­சாறு சாப்­பி­டலாம்.

சப்­பாத்தி, ரவை முத­லி­ய­வற்றில் தாரா­ள­மாக இல்­லாத லைசின், இட்­லியில் தாரா­ள­மாக இருக்­கி­றது. இத­னால்தான் நீரி­ழிவு நோயா­ளியும் காலையில் இட்லி சாப்பிடுவதால் மூளை சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.

நாம் காலை உணவை சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply