கார சட்னி

Loading...

கார சட்னி
தேவையானவை:
சின்ன வெங்காயம் – ஒரு கப், தக்காளி – ஒன்று, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 8, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
தோல் உரித்த சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.

குறிப்பு:
வெங்காயம், தக்காளியை வதக்கத் தேவையில்லை. செட்டிநாட்டு டிபன் வகைகளின் சுவையைக் கூட்டுவதில் இந்த கார சட்னிக்கு முக்கிய இட முண்டு.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply