கார்ன் லாலி பாப்

Loading...

கார்ன் லாலி பாப்
தேவையான பொருட்கள்

உருளைகிழங்கு – கால் கப் (வேகவைத்து, மசித்தது)

கார்ன் – கால் கப் (அரை வேக்காடு வேகவைத்து, மசித்தது)

சோள மாவு – இரண்டு டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

கரம் மசாலா – அரை டீஸ்பூன்

பிரட் தூள் – தேவையான அளவு

வறுத்த ரவை – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

ஸ்டிக் – ஐந்து நம்பர்


செய்முறை

ஒரு கிண்ணத்தில் மசித்த கார்ன், உருளைகிழங்கு, சோள மாவு, கரம் மசாலா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பிறகு, அதில் பிரட் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஓவல் வடிவில் செய்து வறுத்த ரவையில் புரட்டி, குச்சியை நடுவில் சொருகி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சாசுடன் பரிமாறவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply