கர்ப்பிணிகால தரமற்ற அழகுசாதன பொருட்கள் குழந்தைக்கு ஆபத்து

Loading...

கர்ப்பிணிகால தரமற்ற அழகுசாதன பொருட்கள் குழந்தைக்கு ஆபத்துதங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் பெண்களுக்கு நிகர் பெண்களே! அவர்களுக்கு பிடிக்காத அழகு சாதன பொருட்களே கிடையாது. கர்ப்பிணிப் பெண்களும்கூட தங்களை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இவற்றில் சில அழகு சாதனங்கள் அவர்களுக்கு பெரும் தலைவலியை தருவதாக கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அழகு சாதனங்களில் சேர்க்கப்படும் ரசாயன பொருட்கள்தான் இதற்கு காரணம்.
கருத்தரித்த ஒரு பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு 8 முதல் 12 வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. அப்போது, சில ஹார்மோன்கள் தாயின் உடலில் தூண்டப்பட்டு அந்த குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன.
இந்த காலக்கட்டத்தில் அந்த கருவுற்ற தாய் பயன்படுத்தும் தரமற்ற அழகு சாதனப் பொருட்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன் தூண்டலை தடை செய்து விடுகிறது. இதனால், அந்த தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தையின் இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதன் காரணமாக, அந்த குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும்போதே மலட்டுத்தன்மை அடைவதற்கு வாய்ப்புகள் நிறைய இருப்பதாக கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதற்கு ஒரேத் தீர்வு, கர்ப்பிணிப் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதுதான் என்கிறார், ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப். அழகுசாதனப் பொருட்கள் இந்த பாதிப்பை ஏற்படுத்த என்ன காரணம் என்பதற்கு அவர் பதிலளிக்கையில், அவற்றில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயன கலவைகள் அதிகமாக சேர்க்கப்படுவதாக கூறுகிறார்.
இந்த ரசாயனங்கள் புற்றுநோயைக்கூட ஒருவருக்கு ஏற்படுத்தலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார். நீங்கள் அதிக அளவில் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துபவர் என்றால் இன்றே, இப்போதே உஷாராகிவிடுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் எக்காரணம் கொண்டு அழகுசாதனப் பொருட்களை தொட்டு விடாதீர்கள். இயற்கை பழங்களை பயன்படுத்தி பேசியல் செய்தால் நீங்கள் இன்னும் அழகாக ஜொலிக்கலாமே.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply