கர்நாடக இளைஞரின் கைவண்ணத்தில் உலகின் மிகச் சிறிய பைக்

Loading...

கர்நாடக இளைஞரின் கைவண்ணத்தில் உலகின் மிகச் சிறிய பைக்உலகின் மிகச்சிறிய பைக்கை கர்நாடகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வடிவமைத்து அசத்தியதோடு, அதில் ஒரு ரவுண்டும் வந்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

மைசூரை சேர்ந்தவர் சந்தோஷ். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் வெறும் 4 கிலோ மட்டுமே எடை கொண்ட எலக்ட்ரிக் பைக் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

மூஷிகா (மூஞ்சுறு) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பைக் 12 இஞ்ச் அகலமும், 18 இஞ்ச் உயரமும் கொண்டது. மணிக்கு 12 கிமீ முதல் 15 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றது. பேட்டரியில் இயங்கும் இந்த 4 கிலோ எடை கொண்ட பைக்கில் 70 கிலோ எடை கொண்டவர் அமர்ந்து ஓட்ட முடியும். இந்த குட்டி பைக்கை சமீபத்தில் ஓட்டி காட்டி அவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். யூடியூபில் இதன் வீடியோ இருக்கிறது.

இந்த குட்டி பைக் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அத்தோடு, இந்தியன் புக் ஆஃப ரெக்கார்ட்ஸிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த பைக்கை வடிவமைக்க 6 மாதம் ஆனதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு 18,000 செலவானதாக தெரிவித்துள்ளார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply