கண்ணில்கழுத்தில் கருவளையமா

Loading...

கண்ணில்,கழுத்தில் கருவளையமாசில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இதுதான் அவர்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது. கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


கழுத்தில் உள்ள கருவளையம் மறைய….

சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படலாம். இதைப்போக்க கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசவும். 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தினசரி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் அகன்று விடும். சிறிது சூடாக்கப்பட்ட நல்ல எண்ணையினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்து பகுதியில் உள்ள சுருக்கம், கறுப்பு வளையம் நீங்கி மிக அழகாக பளிச்சிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply