ஒவ்வாமைால் அவதியுறும் பெண்கள்

Loading...

ஒவ்வாமைால் அவதியுறும் பெண்கள்மனித உடலில், இரத்தத்தில் ஏதேனும் சேரக் கூடாத பொருள் சேர்ந்து கொண்டு கொடுக்கும் உபாதை தான் அரிப்பு நோய் என்பது. இது பெரும்பாலும் ஒவ்வாமையை வெளிப்படுத்துகினற ஒரு செயல் பாடேயாகும்.

அரிப்பு அல்லது ஒவ்வாமை இரு பாலருக்கும் பொது வானதே என்ற போதிலும், பெண்கள் வீட்டு வேலைகளை காலை முதல் மாலை வரை தொடர்ந்து செய்து கொண்டேயிருக்க வேண்டிய சூழ்நிலையில் தண்ணீருடனும் அவர்களுக்கான தொடர்பும் இருந்து கொண்டேயிருக்கின்றது.

தண்ணீர் சுத்தமாக இல்லாத போது அவற்றில் காணப்படும் கிருமிகள் பெண்களின் நககண்களின் மூலமாக இரத் தத்தில் கலந்து விடுகின்றது. இதன் காரணமாக பெண்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு கைகளிலும் பாதங்களிலும் அரிப்பு மிக எளி தில் ஏற்பட்டு விடுகிறது.

இதைத் தவிர கட்டிட வேலைகளில் ஈடுபட்டுள்ள பெண்கள், சிமெந்து சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், செங்கல் சூளைகளில் பணிபுரியும் பெண்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் முதலானவர்களுக்கு ஒவ்வாமையுடன் அரிப்பு நோயும் தொற்றிக் கொள்கின்றன.

பெண்களை பாதிக்கும் அரிப்பிலிருந்து தம்மை பாது காத்துக்கொள்ள, தம்முடைய உடலை தினமும் குளித்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் நீராடும் போது ஜெர்மிசைடல் என்று அழைக்கப்படும் நல்ல சோப்புகளை பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவு பண்டங்களை முற்றிலும் தவிர்த்து விடல் வேண்டும்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் சாப்பிடும் போதும், வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற போதும் அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் அறி குறிதான் அரிப்பு.

நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.

இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும்.

உடலியல்ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’.

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் – ஈ’ (IgE) என்பார்கள்.

இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல் முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும்.

இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? ‘லேன்ட்-லைன்’ போன் வேலை செய்யும் மெக்கானிஸம் போன்றது இது.

லேன்ட் லைன் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ள வர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பி தான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண் ணில் இரண்டு பேர்தான் பேச முடியும்.

இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல் களுக்கு எடுத்து வருவதும் ஒரே ‘நரம்பு கேபிள் தான்.

நாம் சொறிய ஆரம் பித்ததும், சொறிகிற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச் செல்கிறது.

ஒரு நேரத்தில் ஒரு தக வலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச் செல்லும் என்பதால், அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால் அரிப்பு குறைகிறது.

அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள்.

சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும்.

சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.

குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும்.

றப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம்.

இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், டிடர்ஜெண்ட் சோப்புத்தூள், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழுவதும் அரிப்பை ஏற்படுத்தும்.

நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம்.

வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply