ஒளிக்கற்றையினூடு அதிவேக இணையம் கூகுளின் புதிய முயற்சி

Loading...

ஒளிக்கற்றையினூடு அதிவேக இணையம்  கூகுளின் புதிய முயற்சிநவீன தொழில்நுட்பத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள கூகுள் நிறுவனம் மேலும் பல ஆராய்ச்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றது.

இந் நிறுவனமானது கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் பைபர் புரோட்பேண்ட் சேவையினை அமெரிக்காவின் தெரிவு செய்யப்பட்ட நகரங்களில் அறிமுகம் செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது கூகுள் லூன் எனப்படும் பலூன் மூலமான இணைய இணைப்பினை வழங்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், மற்றுமொரு திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகின்றது.

அதாவது ஒளிக் கற்றையினூடாக (Beam) வயர்லெஸ் முறையில் ஒவ்வொரு வீடுகளுக்கும் அதி வேக இணைய இணைப்பினை வழங்குவதாகும்.

இது தொடர்பான தகவலை கூகுளின் அக்செஸ் (GoogleAccess) தலைமை அதிகாரியான Craig Barratt உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதுடன், இவ் இணைய வேகமானது 1 Tbps இலும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply