ஐ20 பிளாட்பார்மில் புதிய செடான் காரை வடிவமைக்க ஹூண்டாய் தீவிரம்

Loading...

ஐ20 பிளாட்பார்மில் புதிய செடான் காரை வடிவமைக்க ஹூண்டாய் தீவிரம்மாருதி டிசையருக்கு போட்டியாக புதிய என்ட்ரி லெவல் செடான் காரை வடிவமைக்கும் பணிகளில் ஹூண்டாய் தீவிரமாக ஈடுபட்டுள்ளதா தகவல்கள் கூறுகின்றன. ஐ20 ஹேட்ச்பேக் கார் பிளாட்பார்மில் இந்த புதிய கார் வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
சிறிய கார்களுக்கு அடுத்து என்ட்ரி லெவல் செடான் கார் மார்க்கெட்டில் போட்டி அதிகம் நிலவுகிறது. அனைத்து நிறுவனங்களும் தங்களது பிரிமியம் ஹேட்ச்பேக் கார் பிளாட்பார்மிலேயே என்ட்ரி லெவல் செடான் கார்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றன.
மேலும், ஸ்விப்ட் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட டிசையர் காருக்கு தற்போது ஏக டிமான்ட் இருக்கிறது. இந்த நிலையில், அக்ஸன்ட் உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதால், இந்த மார்க்கெட்டில் ஹூண்டாய்க்கு வெற்றிடம் ஏற்பட இருக்கிறது.
இதை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கவும் புத்தம் புதிய என்ட்ரி லெவல் செடான் காரை களமிறக்க ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. தனது பிரிமியம் ஹேட்ச்பேக் காரான ஐ20 பிளாட்பார்மில் இந்த புதிய செடான் காரை ஹூண்டாய் வடிவமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ20 காரில் பொருத்தப்பட்டிருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களை இந்த புதிய காரிலும் பொருத்திவிட ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ப்ளூயிடிக் டிசைனில் வடிவமைக்க திட்டமிட்டிருக்கும் இந்த புதிய கார் வரிச் சலுகை பெறும் விதத்தில், மாருதி டிசையர் போன்றே 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply