ஐபோனில் அப்ளிக்கேஷன்களின் அதிசயவைக்கும் பயன்கள்

Loading...

ஐபோனில் அப்ளிக்கேஷன்களின் அதிசயவைக்கும் பயன்கள்ஐபோன் மாதிரியான ஸ்மார்ட்போன்கள் கையில் இருக்கும் போது பொழுதுபோக்கு அம்சங்களை தேட வேண்டிய அவசியமே இல்லை. ஃப்ரீயாக திரைப்படங்களையம், டிவி நிகழ்ச்சிகளையும் பார்க்க, பல அப்ளிக்கேஷன்களை எளிதாக டவுன்லோட் செய்லாம்.

வெளிநாட்டு சேனல்களை அதிகம் பார்க்க விரும்புபவர்களுக்கு பிபிசி ஐப்ளேயர் என்ற அப்ளிக்கேஷன் சிறப்பாக பயன்படும். இந்த அப்ளிக்கேஷனை டவுன்லோட் செய்து கொண்டால், எங்கிருந்தாலும் டிவியில் நடக்கும் லைவ் ஷோக்களை பற்றிய ஃபுல் அப்டேஷனும் நமது கையில் இருக்கும். உண்மையில் இது போன்ற அப்ளிக்கேஷன், தனிமையை விரட்டிவிடும். நிறைய நண்பர்கள் உங்களுடன் இருப்பது போன்ற உணர்வையும் கொடுக்கும்.

இன்று நிறைய திரைப்படங்கள் வெளியானாலும், பல வருடங்களுக்கு முன் வந்த சில திரைப்படங்களை மீண்டும் பார்க்க வேண்டும் என்றும் தோன்றும். இது போன்ற படங்களை மக்கள் சிடி வடிவில் அதிக விலை போட்டு வாங்குவதும் உண்டு. இது அல்லாமல் சில சமயங்களில் பிடித்த திரைப்படங்களை எப்போதாவது கேபில் வசதியின் மூலமும் பார்க்கும் வாய்ப்பு கிட்டும் தான். க்ளாசிக் திரைப்படங்களை டேப் டிவி அப்ளிக்கேஷன் மூலம் பெறலாம். டேப் டிவி அப்ளிக்கேஷனை ஆப்பிள் மார்கெட்டில் எளிதாக டவுன்லோட் செய்ய முடியும். க்ளாசிக் மூவீஸ், கார்டூன்ஸ், டாக்குமென்ட்ரி திரைப்படங்கள் போன்றவற்றை இந்த அப்ளிக்கேஷனில் பெறலாம்.

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட திரைப்படங்களை கூட இந்த ஐமூவி அப்ளிக்கேஷன் மூலம் எளிதாக பார்க்க முடியும். இதில் சிறப்பான துல்லியத்துடனும் பார்க்கலாம். இந்த ஐமூவி அப்ளிக்கேஷனை ஆப்பிள் மார்கெட்டில் டவுன்லோட் செய்யலாம்.

க்ரேக்கில் என்ற ஐபோன் அப்ளிக்கேஷன், சிறந்த பொழுதுபோக்கிற்கான அப்ளிக்கேஷன் என்பதற்காக நிறைய விருதுகளையும் வாங்கியுள்ளது. அதோடு அதிக பேரால் டவுன்லோட் செய்யப்பட்ட ஒரு ஐபோன் அப்ளிக்கேஷன் என்றும் கூறலாம். இதில் முழு திரைப்படத்தினையும் காணலாம். இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.

மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சிறந்த டிவி ஷோக்களை ஹுலூ ப்ளஸ் என்ற ஐபோன் அப்ளிக்கேஷன் மூலம் பார்க்க முடியும். இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் அதிக விளம்பரங்கள் வந்து குறுக்கிடாது. இதனால் ஆர்வம் குறையாமல் டிவி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். இந்த ஹுலூ ப்ளஸ் அப்ளிக்கேஷன் ஐபோனில் இலவசம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply