எந்த உணவுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்

Loading...

எந்த உணவுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்பாலில் அடங்கி உள்ள அநேக ஊட்டச்சத்துகள் வெண்ணெய்யிலும் காணப்படுகிறது.
வெண்ணெயில் விட்டமின்-ஏ சத்துக்கள் அதிகமான அளவில் காணப்படுகின்றன. இது தைராய்டு மற்றும் சிறுநீரக நோய்களுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாகும்.

ஆனால், எந்த அளவுக்கு நன்மை தருகிறதோ, அந்த அளவுக்கு தீமையும் வெண்ணெய்யில் அடங்கியுள்ளது.


எதனுடன் வெண்ணெய் சாப்பிடலாம்?

பெரும்பாலும் வெண்ணெயை பிரெட் மீது தடவியே பயன்படுத்துவோம். இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி நமக்கே சில வேளைகளில் சலிப்பைத் தரும். எனவே, சர்க்கரை பொங்கல், சப்பாத்தி, உப்புமா போன்றவற்றுடன் சிறிதளவு சேர்ப்பது சுவையைக் கூட்டும்.

சூடான சாம்பாரில் சேர்த்து சாப்பிடலாம். தோசை சுடும்போது வெண்ணெய் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


அதிகம் சேர்த்தால் என்ன பாதிப்பு ஏற்படும்?

பசி எடுக்கும் தன்மையைக் குறைத்துவிடும். அதிகமாக வெண்ணெய் பயன்படுத்துவதால் இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை தொடர்வது மட்டுமின்றி, உடல் பருமன் கூடி, குண்டான உடல் தோற்றத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.


தவிர்க்கவேண்டியவர்கள்!

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயநோய், உடல் பருமன் இல்லாமல் இருந்தால் ஓரளவு எடுத்துக் கொள்ளலாம்.

மற்றவர்கள், வெண்ணெய் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. வெண்ணெயில் உள்ள கலோரிகள் எளிதில் கரையாது.

மேலும் சர்க்கரை நோயாளிகள், இதயம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வெண்ணெயை அறவே தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவும், சக்தியை அதிகரிக்கச் செய்யும். உடல் எடை அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு வெண்ணெய் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள கொழுப்புச் சத்து மேலும் எடையைக் கூட்டிவிடும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply