உண்ணும் உணவால் மட்டுமல்ல அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களாலும் உடல் பருமன் அதிகரிக்கிறது

Loading...

உண்ணும் உணவால் மட்டுமல்ல அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களாலும் உடல் பருமன் அதிகரிக்கிறதுஉணவில் கெமிக்கல் இருந்தால் தானே ஆபத்து என பார்த்து பார்த்து சாப்பிடுவர்கள், கொஞ்சம் நீங்கள் உபயோகிக்கும் பொருட்களையும் பாருங்கள். ஏனெனில் “லீ யின்” என்னும் ஆராய்ச்சியாளர் தலேட் (phthalate) என்னும் கெமிக்கல் நாம் உபயோகிக்கும் எல்லா பொருட்களிலும் உள்ளது என எழுதியுள்ளார்.
நான் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து சோப்பு, நெயில் பாலிஷ் வரை தலேட் (phthalate) என்னும் கெமிக்கல் உள்ளதாம். அவை உடலில் கொழுப்பினை படிப்படியாக உண்டாக்கும். மேலும் பல பல நோய்களை அது உண்டாக்கும் வீரியமிக்கது.
உடல் பருமன் நமது பழக்கவழக்கம் மற்றும் மரபியல் சார்ந்ததோடு மட்டுமல்லாமல், தலேட் போன்ற கெமிக்கலினாலும் உண்டாகக்கூடியது என “லீ யின்” னுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். மேலும் இது இனபெருக்கத்திலும் நச்சு விளைவிக்க கூடியது.
இதனால் மரபணுவில் மாற்றம் வந்து அடுத்து வரும் சந்ததியினரையும் பாதிக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் இதைபற்றி இன்னும் ஆராய்ச்சி நடந்து கொண்டிருப்பதால் இதை குறித்த விரிவான தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என தெரிகிறது.
பரிசோதனையில் எலியிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட செல்லில் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கெமிக்கல் மனிதர்களுக்கும் இதே போன்று தீங்கை விளைவிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கூடுமான அளவில் நாம் இயற்கையோடு ஒத்துப் போயிருந்தால் இன்று இதுபோன்று கூப்பாடு போட வேண்டியிருக்காது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply