உடல் பளபளப்பு பெறவேண்டுமா இதனை பின்பற்றுங்கள்

Loading...

உடல் பளபளப்பு பெறவேண்டுமா இதனை பின்பற்றுங்கள்முகத்திற்கு மட்டும் நன்கு ஒப்பனைகளை செய்துகொண்டு, உடல்களை கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள்.

உடலையும் பளபளப்பாக வைத்துக்கொள்ள சில குறிப்புகளை பின்பற்றுங்கள்.

அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசிக்குளித்தால் வேர்க்குரு, வேனல் கட்டிகள் நீங்கி உடல் பளபளப்பு அடையும்.
பொன்னாங்கன்னி கீரையை தனியாகவோ அல்லது பருப்புடன் சேர்த்தோ சாப்பிட்டால் உடல் பளபளப்பு அடையும்.
துளசி அல்லது வில்வக்கொழுந்தை, காலை வெறும் வயிற்றில் 10 கிராம் அளவில் சாப்பிட்டு பால் குடித்து வந்தால், உடல் சூடு நீங்கி உடல் பளபளப்பு பெறும்.
வெங்காயத்தை வினிகர் சேர்த்து கொதிக்க வைத்து, அதை சூரிய ஒளியில் ஒரு வாரம் வைக்க வேண்டும், பிறகு அதில் இருந்து தினமும் காலை மாலை இரு வேளையும் 5 கிராம் அளவுக்கு எடுத்துக்குடித்தால் உடல்நாற்றம் நீங்கும்.
அதிமதுர இலையை தண்ணீர் சேர்த்து அரைத்துத் தடவினால் அக்குள் பகுதியில் ஏற்படும் நாற்றம் தீரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply