உடலை ஸ்லிம்மாக்க உதவும் கொழுப்பு நிறைந்த உணவுகள்

Loading...

உடலை ஸ்லிம்மாக்க உதவும் கொழுப்பு நிறைந்த உணவுகள்அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் உடலில் சதை வளர்ச்சியை அதிகரிக்க செய்து அவலட்சணமான தோற்றத்தை உருவாக்கும் என்பது மட்டுமே நம்மில் பலருக்கு தெரியும்.
ஆனால் அதே கொழுப்பு உணவுகளைப் பயன்படுத்தி கவர்ச்சியான தோற்றத்தை பேணவும் முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

ஆம், கொழுப்பு உணவுகளில் உள்ள பல கொழுப்பமிலங்களால் பாதகமான விளைவுகள் ஏற்பட்ட போதிலும், நன்மை பயக்கக்கூடிய சில கொழுப்பமிலங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

அதன்படி பின்வருவனவற்றினை உட்கொள்ளுதல் மூலம் இடையை ஸ்லிம்மாக பேண முடியும்.



அவகேடா

இது ஒரு நிரம்பாத கொழுப்பமில உணவாக இருப்பதுடன், இதில் காணப்படும் ஒலீயிக் அமிலமானது அளவுக்கு மீறிய பசி தூண்டப்படலை கட்டுப்படுத்துகின்றது. தவிர உடலிலுள்ள அதிக கொழுப்புச் சத்தினை எரிக்க உதவும் புரதம் மற்றும் நார்ச்சத்து என்பன அதிக அளவில் காணப்படுகின்றது.



தேங்காய்

அதிக அளவில் நிரம்பிய கொழுப்பமில உணவாக காணப்படுவதுடன், லாரிக் அமிலத்தை அதிகளவில் உற்பத்தி செய்யக்கூடியது. இவ் அமிலமானது உடலில் கொலஸ்ட்ராலின் அளவினை கட்டுப்படுத்துவதுடன், அடி வயிறு பருத்தலையும் குறைக்கின்றது.



பாதாம் பருப்பு

இதற்கு இடை பருமனாவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக ஆய்வு ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. அதாவது உடல் பருமனை தூண்டும் கொழுப்புக்களை உறுஞ்சுவதை தடுக்கும் கலவைகள் பாதாம் பருப்பிற்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



யோகட்

கிரேக்க நாட்டில் தயாரிக்கப்படும் யோகட் சிறந்தது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காரணம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் அதில் நிறைந்த கொழுப்பு காணப்படுவதனாலுமாகும்.

தவிர இதில் புரோபயாடிக் பக்டீரியாக்கள் நிறைந்து இருப்பதால் அவை அடி வயிற்று பருமனையும் தடுக்கின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply