உடலுக்கு பொலிவைத் தரும் கரட்

Loading...

உடலுக்கு பொலிவைத் தரும் கரட்தினமும் உண­வோடு கரட்டை பச்­சை­யாக சாப்­பிட்டால் தானாகவே அழகாகிவிடும் அதுவே ஆரோக்­கி­யத்­தையும் தரும். பச்­சை­யா­கவோ, சாறு எடுத்து பாண­மா­கவோ, சம்­ப­லா­கவோ, தயிரில் கலந்தோ சாப்­பி­டலாம். கரட்­டா­னது உண­வா­கவும், மருந்­தா­கவும் இருக்­கி­றது.

புற்­று­நோயை அதன் தாக்­கத்தை குறைக்கும் சக்­தி­யினை கொண்­டது. நீரி­ழிவு நோய்க்கு மிகச் சிறந்த மருந்­தா­கி­றது. மருந்தை உண­வாகக் கொள்­ளாமல் உணவை மருந்­தாக்க வல்ல பல அபூர்வ சத்­துக்­களை உள்­ள­டக்­கி­யது.

குழந்­தைகள் இனிப்பு வகை­களை விரும்பி உண்பர். பற்கள் பழுத­டை­வ­தற்கு இதுவே மிகப் பெரிய கார­ணமும் கூட. அதற்­காக அவர்­களை இனிப்பை சாப்­பி­டாதே என்று தடுக்­கவும் முடி­யாது. தடுத்தால் அதை கேட்­கவும் மாட்­டார்கள்.

அதனால் குழந்­தைகள் இனிப்பு வகை­களை சாப்­பிட்­ட­கை­யோடு ஒரு கரட்டை பச்­சை­யாக கொடுத்து உண்ணச் சொல்­லுங்கள் கிரு­மி­களைக் கொல்லும் சக்­தியும், அதி­க­மான சுண்­ணாம்பு சத்தும் கரட்டில் உள்­ளது.

சரி உடல் நலத்­திற்கு கரட் பல வித­மா­கவும் பயன்­ப­டு­கி­றது என்­பது சரிதான் ஆனால் அழ­குக்கு என்ன செய்­கி­றது என்று நீங்கள் கேட்­பது விளங்­கு­கி­றது

கரட்டை நன்­றாக அரைத்து கொஞ்சம் தயிர் சேர்த்து முகத்தில் பக் (pack) ஆக இட்டுக் கொள்­ளலாம் பின்னர் 20 நிமி­டங்கள் கழித்து நீரினால் முகத்தை கழு­வினால் முகம் மினு மினு­வென்று சுருக்­கங்கள் இன்றி பொலி­வாக மின்னும்.

கரட்டில் தோலை அழ­காக்கும் பொருட்கள் இருக்­கி­றது.

பச்­சை­யாக சாப்­பி­டு­வதால் மட்­டுமே கரட்டின் பயனை முழு­மை­யாக பெற்­றிட முடியும். மானி­ற­மாக இருப்­ப­வர்கள் கூட சிவப்­ப­ழகு மேனியை பெறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply