உடற்­ப­யிற்­சிக்கு பின்னர் சாப்­பி­டக்­கூ­டாத உண­வுகள்

Loading...

உடற்­ப­யிற்­சிக்கு பின்னர் சாப்­பி­டக்­கூ­டாத உண­வுகள்உடலை ஆரோக்­கி­ய­மாக வைத்­துக்­கொள்­வ­தற்­காக தினமும் உடற்­ப­யிற்­சியை மேற்­கொள்­கிறோம்.

நம் உட­லுக்கு சக்­தியை கொடுக்கும் கிளை­கோஜென் என்னும் வேதிப்­பொருள் உடற்­ப­யிற்­சியின் போது வெளி­யே­று­கி­றது.

அது­மட்­டு­மல்­லாமல் நம் தசை­களும் சேத­ம­டைந்­து­வி­டு­கின்­றன, இதனால் நாம் உடற்­ப­யிற்­சியின் மூலம் இழந்த சக்­தி­யினை, புர­தச்­சத்து மற்றும் கார்­போ­ஹைட்ரேட் போன்­ற­வற்றின் மூலம் பெறலாம்.

ஆனால், உடற்­ப­யிற்­சிக்கு பின்னர் சில­வகை உண­வு­களை நாம் தவிர்ப்­பது நல்­லது.மாமிசம் :

உடற்­ப­யிற்­சிக்கு பின்னர் கொழுப்­பு­வகை உண­வு­களை தவிர்ப்­பது நல்­லது, மாமி­சத்தில் கொழுப்பு அதிகம் இருப்­பதால் அதனை நாம் உட்­கொள்­ளும்­போது இரத்­தக்­கு­ழாய்­களில் அடைப்பு ஏற்­பட வாய்ப்பு உள்­ளது.பாண் :

பிரட்டில் குளூட்டென் மற்றும் சர்க்­கரை அதிகம் இருப்­பதால் நாம் உடற்­ப­யிற்சி மேற்­கொண்ட பின்னர் பாண் சாப்­பி­டும்­போது உடலில் சர்க்­க­ரைச்­சத்து வேக­மாக அதிகரிக்க வாய்ப்பு உள்­ளது.நார்ச்­சத்து உண­வுகள் :

பொது­வாக நார்ச்­சத்து உள்ள உண­வுகள் உட­லுக்கு ஆரோக்­கியம் தரும், ஆனால் உடற்­ப­யிற்சி முடித்த பின்னர் நார்ச்­சத்து உள்ள உண­வு­களை எடுத்­துக்­கொண்டால் செரி­மா­னப்­பி­ரச்­சினைகள் ஏற்­பட வாய்ப்­புள்­ளது, எனவே அதற்கு பதி­லாக ஆம்லெட், கீரை போன்­ற­வற்றை எடுத்­துக்­கொள்­ளலாம்.தயிர், வெண்ணெய் :

உடற்­ப­யிற்­சிக்கு பின்னர் நம் உடலில் இரத்த ஓட்­ட­மா­னது வயிற்­றுக்குள் செல்­லாமல் வெளியே தான் இருக்கும்,

எனவே அந்த நேரங்­களில் தயிர் வெண்ணெய் போன்ற கொழுப்பு நிறைந்த உண­வு­களை எடுத்­துக்­கொள்­ளும்­போது செரி­மா­னப்­பி­ரச்­ச­னைகள் ஏற்­படும், மேலும் கொழுப்­புச்­சத்து அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது.

எனவே உடற்பயிற்சி முடிந்தவுடன் நீரையே முதலிப் பருகவேண்டும். பழங்களையோ பழச்சாறையே பருகவும் கூடாது. அவையும் இரத்தத்தில் சர்க்கரைச்சத்தை அதிகரிக்கச் செய்து விடும்.பழ ஜூஸ்

பழங்கள் உட­லுக்கு நல்­ல­தாக இருந்­தாலும், உடற்­ப­யிற்சி செய்த பின்னர் ஜூஸ் உடனே சாப்­பிடக் கூடாது.

இதனால் அதில் உள்ள சர்க்­கரை, இரத்­தத்தில் உள்ள சர்க்­க­ரையின் அளவை அதிகரித்துவிடும்.

ஒருவேளை ஏதாவது குடிக்க வேண்டுமென்று தோன்றினால், தண்ணீர் அல்லது ஐஸ் துண்டுகள் போட்ட மூலிகை டீ அல்லது இளநீரை குடிக்கலாம்.

இது மிகவும் ஆரோக்கியமானது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply