உங்கள் தோலை திரையாக மாற்றும் அதிரடித் தொழில்நுட்பம்

Loading...

உங்கள் தோலை திரையாக மாற்றும் அதிரடித் தொழில்நுட்பம்இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியானது எந்தவிதமான எல்லைகளும் இல்லாது பல்கிப் பரந்து காணப்படுகின்றது.

இதற்கு சான்று பகிரும் விதமாக மற்றுமொரு புதிய கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது மனித உடலிலுள்ள தோல் பகுதியினை திரையாக (Display) ஆக மாற்றக்கூடிய தொழில்நுட்பமே அதுவாகும்.

Super Thin LED SkinDisplay எனும் இத் தொழில்நுட்பத்தில் இலத்திரனியல் சுற்றுக்களைக் கொண்ட மிக மெலிதான லெமினேட் ஸ்டிக்கர் ஒன்று தோலில் ஒட்டப்படும்.

பின்னர் இதற்கு சமிக்ஞையினை வழங்கும்போது குறித்த திரையில் காணப்படும் LED விளக்குகள் சமிக்ஞைக்கு ஏற்றவாறு செயற்பட ஆரம்பிக்கும்.

இதற்கான மிக மெல்லிய LED விளக்குகளை ஜப்பானிலுள்ள டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

மேலும் இந்த இலத்தினியல் ஸடிக்கரின் தடிப்பானது 3 மைக்ரோ மீற்றர்களாக காணப்படுகின்றது.

இதன் மூலம் அணிந்திருப்பவரின் இதயத்துடிப்பு, இரத்தத்திலுள்ள ஒட்சிசனின் அளவு என்பவற்றினையும் காட்சிப்படுத்த முடியும்.

இந்த ஸ்டிக்கர்கள் தொழில்நுட்பத்தினால் எதிர்காலத்தில் மனிதர்கள் எந்தவொரு பாரமான இலத்திரனியல் பொருட்களையும் எடுத்துச் செல்லவேண்டியதன் அவசியம் ஏற்படாது என Takao Someya என்பவர் தெரிவித்துள்ளார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply