இவ்வளவு விடயங்கள் உள்ளதா ஆண்களின் உடலில்

Loading...

இவ்வளவு விடயங்கள் உள்ளதா ஆண்களின் உடலில்ஆண்கள் தங்களது அழகில் அதிக கவனம் செலுத்துவதை விட ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் பெரும்பாலான ஆண்கள் நீரிழிவு நோய், இதய நோய்கள், மன அழுத்தம் போன்றவற்றிற்கு ஆளாகின்றனர்.

எனவே ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.


சாப்பிட வேண்டிய உணவுகள்

தக்காளியில் உள்ள கைகோபைன் எனும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.

இயற்கையான பாலுணர்வை தூண்டக்கூடிய கடல்சிப்பியை ஆண்கள் சாப்பிட்டால், விந்தனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பூண்டு மற்றும் தானியங்களில் உள்ள நார்ச்சத்து, புரோட்டீன் போன்றவற்றை சாப்பிட்டால் ஆற்றல் அதிகரித்து மன அழுத்தம் நீங்கும்.

மீன்களில் உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட் ஆரோக்கியம் அளிக்கும், அதுவும் கானாங்கெளுத்தி மீன் தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

டயட்டில் இரக்கும் ஆண்கள் ப்ரோக்கோலியை தங்கள் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் அதில் உள்ள விட்டமின் சி, கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை இரத்த ஓட்டத்தை சீராக்கி எலும்புகள் மற்றும் நோயெதிப்பு சக்தியை தரும்.

மாதுளையில் உள்ள கனிமச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆண்களை தாக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திலிருந்து காக்கிறது.

பாதாம் கண்டிப்பாக சாப்பிடவேண்டிய ஒன்று, ஏனெனில் பாதாமில் உள்ள விட்டமின் சி, புரோட்டீன், நார்ச்சத்து போன்றவை இதயநோயாளிகளுக்கு சிறந்தது.

ஆண்களுக்கு தேவையான ஜிங்க் மற்றும் இரும்புசத்து மாட்டிறைச்சியில் நிறைந்துள்ளது, எனவே இதனை உட்கொள்ளுங்கள்.


சிக்ஸ் பேக் ஆரோக்கியமா?

‘சிக்ஸ் பேக் வைத்துக்கொள்ள முயற்சி செய்பவர்கள்,உடலில் உள்ள கொழுப்பை ஒன்பது சதவிகிதம் ஆகவும் நீரின் அளவினை 40 சதவிகிதம் அளவுக்குக் குறைத்தே ஆக வேண்டும்.

மேலும், புரதச் சத்தை மட்டும் அதிகம் எடுத்துக்கொள்வதால், கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.

ஒருகட்டத்தில் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது. அதிக அளவு உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் வெப்பம் அதிகரிக்கும்.

மாவுச்சத்து, பால் பொருட்களைத் தவிர்ப்பதால், உணவின் விகிதாச்சாரம் மாறுபட்டு, மயக்க நிலைக்குத் தள்ளப்படலாம்.

மேலும், தலை முடி உதிர்த்தல், மலச்சிக்கல் பிரச்னைகளும் ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

சிக்ஸ் பேக்கை, பாதியிலேயே நிறுத்துபவர்கள், நிச்சயம் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.

சிக்ஸ் பேக் வைப்பதால் தேவை இல்லாத வலிகள், பிரச்சனைகள் ஏற்படும்.

நம் உடலுக்கு ஏற்ற வகையில் இல்லாமல், அதிக அளவு எடை தூக்குவதால் கால்கள், இடுப்புகளில் உள்ள தசைகளில் வலி ஏற்படும். தொடர்ந்து இதுபோன்று செய்பவர்களுக்கு இந்த வலி நிரந்தரமாகிவிடும்.

அதேபோல் தசைநார் வழியாக ரத்தம் செல்லாவிடில், இதயத்துடிப்பு குறைந்து மயக்க நிலை ஏற்படலாம்.

எனவே ஆண்கள் சிக்ஸ் பேக் வைக்க ஆசைப்படும் ஆண்கள், அதற்கேற்ற ஆரோக்கிமான உணவுகளை எடுத்துக்கொண்டு சிக்ஸ் பேக் முயற்சியில் ஈடுபடுங்கள்.


அழகு குறிப்பு

ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம் கொடுக்கவும்.இதனால் முகம் தெளிவடையும்.

முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும். கருபுள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.

சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும்.

இளம் நரை வந்தவர்கள் ஷாம்பு போடுவதை தவிற்க்கவும். கூந்தலை ட்ரையாக வைக்க வேண்டாம். சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவவும்.

முட்டையில் வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.

ஹேர் ட்ரை, ஸ்பிரே, ஜெல், ஹேர் கலரிங், ஸ்பார்கல் போன்றவையினை கூந்தலுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply