இருமலை குணப்படுத்தும் சீரகம்

Loading...

இருமலை குணப்படுத்தும் சீரகம்தற்போது பலருக்கும் சளி , இருமல் போன்றவை எளிதில் தொற்றிக்கொள்கின்றன. இத்தகைய சளி , இருமலுக்கு பலரும் பல்வேறு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றன . ஆனாலும் எந்த ஒரு பலனும் இருந்திருக்காது. அப்படி வெளியே மருந்துக் கடைக்கு சென்று மருந்து வாங்கி உட்கொள்வதை விட உட்கொள்வதை விட்டு நம் வீட்டின் உள்ளேயே இருக்கும் குட்டி மருந்துக்கடையான சமையலறைக்குச் சென்று அங்குள்ள அற்புதமான சில பொருட்களைக் கொண்டே சளி மற்றும் இருமலுக்கு உடனடி நிவாரணத்தைக் காணலாம். அப்படி சளி மற்றும் இருமலுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடியது தான் சீரகம். இந்த சீரகத்தில் நோயெதிர்ப்பு சக்தி ,அழற்சித் தன்மை ,அன்டிபக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்புத் தன்மை அதிக அளவில் நிறைவடைந்துள்ளது. மேலும் சீரகத்தில் உள்ள சத்துக்களால் காயமடைந்த தசைகள் ரிலாக்ஸாகும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலில் உள்ள நோய்த்தொற்றுக்கள் வரைவில் குணமாகும்.

அதுமற்றுமின்றி , சீரகத்தில் உள்ள விற்றமின் ஏ மற்றும் சி சளிக்கு உடனடி நிவாரணத்தைத் தரும். இப்போது சீரகத்தைக் கொண்டு எப்படி சளிக்கு உடனடி நிவாரணம் காண்பது என்று பார்ப்போம். 2 கப் நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க விட்டு , பின் அதில் சிறிது இஞ்சி மற்றும் துளசி இலை இலைகளை தட்டி சேர்த்து வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் குடித்து வந்தால் ,சளிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். சளியினால் மூக்கடைப்பு ஏற்பட்டிருந்தால் , சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு , அத்துடன் சிறிது கிராம்பையும் சேர்த்து கொதிக்க விட்டு அத்துடன் அந்த நீரை ஆவி பிடித்தால் , மூக்கடைப்பு நீங்கி , நிம்மதியாக மூச்சு விட முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply