இரவு நேரம் தாமதமாக உட்கொள்கின்றீர்களா

Loading...

இரவு நேரம் தாமதமாக உட்கொள்கின்றீர்களாஉணவு உட்­கொள்­வது என்­பது கூட ஓர் இலக்­கணம் போல தான்.

அதைத் தவறி செய்யும் போது, நமது உடலில் பல விட­யங்கள் தவ­றாக நடக்­கி­றது. உங்­க­ளது வயிற்­றுக்கு சரி­யான நேரத்தில் உண­வ­ளிக்க வேண்டும்.

உண்ணா நோம்பு இருப்­ப­தற்குக் காரணம் கடவுள் நம்­பிக்கை அல்ல, அது உங்கள் உடல் பாகத்­திற்கு சிறிய இடை­வேளை போன்­றது.

சிலர், உண்ணா நோம்பு இருக்கும் போது பால், பழங்கள் மட்டும் சாப்­பி­டுவர், சிலர் இது தான் விர­தமா? என்று நக்­க­லாக கூறு­வார்கள்.

ஆனால், வாரத்­திற்கு ஒரு முறை­யா­வது உங்கள் உடல் இயக்­கத்தை சீராக பரா­ம­ரிக்க இல­கு­வான உண­வுகள் மட்டும் சாப்­பிட்டு, உடல் பாகங்­க­ளுக்கு ஓய்­வ­ளிக்க வேண்­டி­யது அவ­சியம். அப்­போது தான் உங்கள் உடல்­ந­லமும், ஆரோக்­கி­யமும் நல்ல முறையில் இருக்கும்.

இரவு வேளை­களில் தாம­த­மாக உணவு சாப்­பி­டு­வ­தனால் ஏற்­படும் உடல்­நலக் கோளா­றுகள் பற்றிப் பார்க்­கலாம்…!

சிலர் நாள் முழுதும் சாப்­பிடக் கூட நேரம் ஒதுக்­காமல் வேலை செய்­து­விட்டு, நள்­ளி­ரவு கடும் பசி என்று நிறைய சாப்­பிட்­டு­வி­டு­வார்கள்.

இதனால், உங்கள் வயிறு உப்­புசம் அடைந்து உறக்கம் தான் கெடும். இரவு நேரங்­களில் பொது­வா­கவே கடின உண­வு­களை சாப்­பி­டு­வதை தவிர்ப்­பது நல்­லது.

இரவு மிகவும் தாம­த­மாக உணவு உட்­கொள்­வதால், உங்கள் உடல் பருமன் தான் அதி­க­ரிக்கும். நாம் எவ்­வ­ளவு சாப்­பி­டு­கி­றோமோ, அந்த அளவு கலோ­ரிகள் கரைய வேலை செய்தல் அவ­சியம்.

ஆனால், நாம் இரவு தாம­த­மாக சாப்­பிட்­டு­விட்டு குப்­பு­றப்­ப­டுத்து தூங்­கி­வி­டுவோம். இதனால், உடல் எடை தான் அதி­க­ரிக்கும். இரவு தாம­த­மாக சாப்­பிடும் போதுக் கடி­ன­மான, கார­மான, வாயு அதிகம் உள்ள உண­வுகள் சாப்­பிட்டால் நெஞ்­செ­ரிச்சல் ஏற்­படும்.

எப்­போதும் நாம் சாப்­பிட்ட உட­னேயே தூங்­கு­வது தவ­றான அணு­கு­முறை ஆகும். சாப்­பிட்ட பிறகு சிறிது நேர­மா­வது வேறு வேலைகள் செய்ய வேண்­டி­யது அவ­சியம்.

இல்­லை­யெனில் செரி­மானம் ஆகும் போது ஏற்­படும் அமில எதிர்­வி­ளை­வுகள் கார­ண­மாக வயிறு சார்ந்த பிரச்­சி­னைகள் ஏற்­ப­டலாம்.

இவ்­வாறு தாம­த­மாக சாப்­பிடும் போது சில­ருக்கு காலை வேளையில், காலைக்­கடன் கழிப்­பது மிகவும் கடி­ன­மாக இருக்கும்.

இரவு தாம­த­மாக சாப்­பி­டு­வதும் கூட அதற்கு ஓரு கார­ண­மாக இருக்­கின்­றது.

எனவே, முடிந்த வரை இரவு வேளை­களில் தாம­த­மாக சாப்பிடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply