இரவு உணவிற்கு பின் வாழைப்பழம் நல்லதா

Loading...

இரவு உணவிற்கு பின் வாழைப்பழம் நல்லதாவறு­மையில் வாடு­கிற பல­ருக்கும் பல நாட்கள், பல வேளைகள் பசி­யாற்­று­கிற உணவு வாழைப்­பழம்.

இது ஒரு பக்­க­மி­ருக்க, வயிறு முட்ட விருந்தே உண்­டாலும், கடை­சி­யாக ஒரு வாழைப்­ப­ழத்தை உள்ளே தள்­ளி­னால்தான் திருப்­தி­யா­கி­ற­வர்கள் இன்­னொரு பக்கம்.

இரவு உண­வுக்குப் பிறகு வாழைப்­பழம் சாப்­பி­டு­கிற பழக்கம் அநேகப் பேருக்கு உண்டு. மலச்­சிக்­க­லுக்கு அதுதான் மருந்து என்­பது காலங்­கா­ல­மாக மக்­க­ளிடம் பதிந்து போன எண்ணம். இது சரியா? தெளி­வுப்­ப­டுத்­து­கிறார் ஊட்­டச்­சத்து நிபுணர் திவ்யா.

இரவு உண­விற்குப் பின் எந்த பழமும் சாப்­பி­டு­வது நல்­லது கிடை­யாது.

அதிலும் குறிப்­பாக வாழைப்­பழம் சாப்­பி­டு­வது ஆரோக்­கி­யத்­திற்கு உகந்­தது இல்லை. ஏனென்றால், அதில் உள்ள Fructose என்ற சர்க்­கரை சத்து கொழுப்­பாக மாறி நமது உடலில் நிரந்­த­ர­மாக தங்கி விடும்.

இதன் கார­ண­மாக உடலில் கலோரி அதி­க­மாகும். உடல் எடை அதி­க­ரிக்கும். ஒரு சிலர் இரவு உண­விற்­குப்பின் வாழைப்­பழம் சாப்­பி­டு­வதை பழக்­க­மாக கொண்­ட­வர்கள் சாப்­பிட்ட உடனே வாழைப்­பழம் சாப்­பி­டக்­கூ­டாது.

பதி­னைந்து நிமி­டங்கள் கழித்து சாப்­பி­டலாம்.

இரவு உண­விற்குப் பின் வாழைப்­பழம் சாப்­பி­டு­வதால், சாப்­பிட்ட உண­வு­ வி­ரை­வாக செரி­மானம் ஆகும், காலைக்­க­டன்­களை எந்­த­வித சிர­மமும் இல்­லாமல் செய்ய முடியும் என்று கூறு­வதில் ஓர­ள­விற்கு உண்மை இருக்­கி­றது.

வயிற்று உபாதை கார­ண­மாக காலைக்­க­டன்­களை முடிக்க சிர­மப்­ப­டு­ப­வர்கள் இரவு உண­விற்­குப்பின் வாழைப்­பழம் சாப்­பி­டு­வதைத் தவிர்ப்­பது நல்­லது.

அதற்கு பதி­லாக நார்ச்­சத்து அதிகம் உள்ள காய்­க­றிகள்,பழங்கள் ஆகி­ய­வற்றை உணவில் சேர்த்­துக்­கொள்­ளலாம். மலம் கழிக்க சிர­மப்­ப­டு­ப­வர்கள் Prunes என்ற பழம் சாப்­பி­டலாம்.

யாரெல்லாம் இரவு உண­விற்­குப்பின் வாழைப்­பழம் சாப்­பி­டலாம் என்­ப­திலும் கட்­டுப்­பாடு உள்­ளது. பன்னி­ரெண்டு வயது வரை குழந்­தை­க­ளுக்கு இரவில் வாழைப்­பழம் கொடுக்­கலாம்.

இவர்கள் காலை, மாலை என எந்த நேரத்­திலும் இதை சாப்­பி­டலாம். தொடர்ந்து இரவு நேரங்­களில் வாழைப்­பழம் சாப்­பி­டு­வதால் ஒரு­சில குழந்­தை­க­ளுக்கு சளித்­தொல்லை ஏற்­படும்.

வய­தா­ன­வர்­களும் நீரி­ழிவு உள்­ள­வர்­களும் சாப்­பி­டக்­கூ­டாது. விளை­யாட்டு வீரர்கள் மற்றும் உடற்­ப­யிற்சி கூடங்­க­ளுக்கு செல்­ப­வர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

இதன் காரணமாக இவர்களுக்கு உடலில் கலோரி அளவு அதிகரிக்கும்.

எனவே, இவர்களால் களைப்படையாமல் நீண்ட நேரம் உடற் பயிற்சிகள் செய்ய முடியும்.’’

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply