இரத்தத்தில் உள்ள அழுக்குகளை எவ்வாறு வெளியேற்றுவது

Loading...

இரத்தத்தில் உள்ள அழுக்குகளை எவ்வாறு வெளியேற்றுவதுபோதிய உடற்பயிற்சி இல்லாமலும், உடலுக்கு கெடுதலான உணவு பழக்கவழக்கங்களினாலும் அதிகபடியான டாக்ஸின்கள் இரத்தத்தில் அதிகரித்து இரத்தத்தை கெட வைக்கின்றன.

இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்து பல நோய்களை உடலில் குடியேற வழிவகுக்கிறது. எனவே நாம் உடலில் உள்ள டாக்ஸின்களை எவ்வாறு உணவு மூலம் அகற்றலாம் என்று பார்க்கலாம்.


எலுமிச்சை

இதில் உள்ள வைட்டமின் சி இரத்த மண்டலத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். இவை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.


மஞ்சள்

மஞ்சளில் உள்ள குரகுமின் கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். அதனால் உங்கள் உணவில் மஞ்சளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவும்.


கேரட்

இதில் உள்ள குருதாதயோன் கல்லீரலை சுத்தப்படுத்தி உடலியக்கம் சீராக இருக்க உதவும்.


கொத்தமல்லி

இது இரத்தத்தில் உள்ள மெர்குறியை வெளியேற்றி இரத்தத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றும்.


பாகற்காய்

இது இரத்தத்தை சுத்தமாக்குவது மட்டுமல்லாமல் உயர் இரத்த அமுக்கம் , நீரழிவு, செரிமான பிரச்சினை, உடற் பருமன் ஆகியவற்றுக்கு நிவாரணியாக செயல்படும்.


வேப்பிலை

நம் மூதாதையர் நமக்கு கொடுத்த வரப்பிரசாதம்தான் வேப்பிலை. இதன் கொழுந்தை தினமும் உட்கொண்டு வந்தால் எவ்வித நோய்களும் நம் அருகில் அண்டாது.


துளசி

இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயற்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் பூண்டு , அப்பிள் மற்றும் பீட்ரூட்டை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply