இமாலய சாதனையை நோக்கிய நகரும் அப்பிள் நிறுவனம்

Loading...

இமாலய சாதனையை நோக்கிய நகரும் அப்பிள் நிறுவனம்அப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்த ஸ்டீவ் ஜொப்ஸ்சினால் 2007ம் ஆண்டு முதன் முறையாக iPhone அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
அதன் பின்னர் சுமார் 9 ஆண்டு காலங்களில் பல்வேறு மாற்றங்களைத் தாங்கிய புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

உலகளாவிய ரீதியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ஐபோன் ஊடாக அப்பிள் நிறுவனம் ஆனது விரைவில் இமாலய சாதனை ஒன்றினை எட்டவுள்ளது.

அதாவது ஐபோன் ஆனது விற்பனையில் ஒரு பில்லியனை எட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகளின்படி 2015ம் ஆண்டு முடிவில் 896 மில்லியன் ஐபோன்கள் விற்பனையாகியிருந்த நிலையில், 2016ம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் இதுவரை 50 மில்லியன் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையிலேயே விரைவில் ஒரு பில்லியனை எட்டவுள்ளதாகவும், இது அனேகமாக எதிர்வரும் ஜுலை மாதம் அளவில் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply