இனிப்பு சீயம்

Loading...

இனிப்பு சீயம்
தேவையானவை:
பச்சரிசி, உளுந்து – தலா ஒரு கப், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

பூரணம் செய்ய:
தேங்காய் – ஒன்று, பொடித்த வெல்லம் – ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் – 2 டீஸ்பூன், நெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை:
தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் போக கிளறவும். அதனுடன் கரைத்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி ஆறவிடவும். இதுதான் பூரணம்.
பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்துக் களைந்து, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, பின் நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கிளறி வைத்துள்ள பூரணத்தை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பூரணத்தை அரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்…. சுவையான இனிப்பு சீயம் தயார்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply