இந்தியாவில் வாட்ஸ் அப் தடை செய்யப்பட வாய்ப்பு

Loading...

இந்தியாவில் வாட்ஸ் அப் தடை செய்யப்பட வாய்ப்புஇந்தியாவில் வாட்ஸ்அப் செயலி தடை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தகவல்களை பகிரும் செயலியான ‘வாட்ஸ்அப்’, உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்டோரால் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் வாட்ஸ்அப் தனது செயலியில் சில மாற்றங்களை செய்தது.

அதாவது, தனது செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்களை அனுப்புபவரும், அதைபெறுபவரும் மட்டுமே பார்க்க முடியும். சைபர்குற்றவாளிகளோ, இணையதளத்தை முடக்குபவர்களோ கூட பார்க்க முடியாது.

‘அவ்வளவுஏன், வாட்ஸ்அப்நிறுவனத்தை உருவாக்கிய நாங்கள் கூட பார்க்க முடியாது’ என்று அதன் நிறுவனர்கள் ஜன் கவும், பிரையன் ஆக்டன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பிரேசில் நாட்டில் இந்த புதிய வசதி ஏற்கனவே சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் இணையச் சேவைகள் 40 பிட் என்கிரிப்சன் வரை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. இந்த திறனுடன் அனுப்பப்படும் தகவல்களை, பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் பார்க்க முடியும்.

ஆனால், வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதியில், 256 பிட் என்கிரிப்சன் வரை பயன்படுத்தப்படுகிறது. 40 பிட் என்கிரிப்சனுக்கு மேல் பயன்படுத்த வேண்டுமானால், அதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்து சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

ஆனால், அதற்கு வாட்ஸ்அப் சம்மதிக்காது என்று தெரிகிறது. அனுமதிபெறாமல், 40 பிட் என்கிரிப்சனுக்கு மேல் பயன்படுத்தி, தகவல்களை பகிர்வது இந்தியாவில் சட்ட விரோதம் ஆகும்.

ஆகவே, தற்போதைய தரம் உயர்த்தப்பட்ட வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தும் அனைவரும் சட்ட விரோத காரியத்தை செய்து வருவதாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை புலனாய்வு அமைப்புகள் பார்க்க முடியாததால், நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும்அபாயம் உள்ளது.

எனவே, தொலைத்தொடர்பு சட்ட விதிமுறைகளுக்கு உட்படாததாலும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை உருவாக்குவதாலும் இந்தியாவில் வாட்ஸ்அப் தடைசெய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

அதேசமயத்தில் உடனடியாக தடை விதிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் வாட்ஸ்அப், இந்திய நிறுவனம் அல்ல. செல்போன் சேவை நிறுவனங்கள் மற்றும் இணையதள சேவை நிறுவனங்களைப் போல, வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் ஆகிய செயலிகள், இந்தியாவில்இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை.

எனவே இந்திய தொலைத்தொடர்பு விதிமுறைகள் அந்த செயலிகளை கட்டுப்படுத்தாது என்று கூறப்படுகிறது. வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை ஒழுங்கு படுத்திய பிறகுதான், அவற்றின்மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, வாட்ஸ்அப் மீது நடவடிக்கை எடுக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply