இந்தியாவிலிருந்து விடை பெறும் மோட்டோரோலா

Loading...

இந்தியாவிலிருந்து விடை பெறும் மோட்டோரோலாபல ஆண்டு காலமாக இந்தியாவில் மோட்டோராலா சிறப்பான முறையில் வர்த்தகம் செய்து வந்தது. தற்போது பலவிதமான காரணங்களுக்காக இந்தியா மற்றும் ஆசிய பசிபிக் நாடுகளில் இருக்கும் தனது கிளைகளுக்கு மூடுவிழா நடத்த இருக்கிறது. இதனை மோட்டோராலாவின் தலைமை இயக்குனர் டெனிஸ் ஊட்சைட் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இதன் மூலம் இந்தியா மற்றும் ஆசியா பசிபிக் நாடுகளில் இருந்த மோட்டோராலாவின் கிளைகளில் பணி புரிந்த பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் உள்ள மோட்டோரோலாவில் பணி புரியும் பணியாளர்கள் மட்டுமே தங்களது வேலையை இழக்கமாட்டார்கள் என்று தெரிகிறது.

ஸ்டாக் இருக்கும் வரை இந்தியாவில் மோட்டோரோலாவின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படும். அதுபோல் மோட்டோரோலாவின் சேவை மையங்களும் இந்தியாவில் தொடர்ந்து செயல்படும் என்று தெரிகிறது.

ஐதராபாத்திலுள்ள மோட்டோரோலாவின் சொத்துக்கள் விற்பனைக்கு இருப்பதாக ஒரு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆசியா பசிபிக் பகுதிகளில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் கொரியா போன்ற நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் உள்ள தனது அலுவலகங்களை மோட்டோரோலா மூட இருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் உள்ள மோட்டோரோலாவின் மொத்தமுள்ள 94 அலுவலகங்களில் மூன்றில் ஒரு பகுதியை மூடிவிடும் என்று தெரிகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply