இத்தாலி விஞ்ஞானிகளின் அசத்தல் சாதனையில் பெண் ரோபோ

Loading...

இத்தாலி விஞ்ஞானிகளின் அசத்தல் சாதனையில் ‘பெண் ரோபோ’சிரிப்பு, பயம், கோபம், சோகம் என பல்வேறு முக பாவங்களை வெளிப்படுத்தும் பெண் ரோபோவை இத்தாலி விஞ்ஞானிகள் உருவாக்கி அசத்தியுள்ளனர். இத்தாலியில் உள்ள பைசா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர் நிகோல் லாசரி. இவரது தலைமையிலான டீம் அற்புதமான ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளது. அச்சு அசலாக ஒரு பெண் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோவுக்கு பெயர் ஃபேஸ். பொதுவாக ரோபோ என்றால் மெட்டல் முகத்துடன் இருக்கும்.

இது ஹியூமனாய்டு வகையை சேர்ந்தது என்பதால், பிளாஸ்டிக், ரப்பர், கிளாஸ் பைபர் போன்றவற்றை பயன்படுத்தி மனித தோல் போலவே இந்த பெண் ரோபோவை வடிமைத்துள்ளனர். ஆச்சரியம், மகிழ்ச்சி, சோகம், பயம், கோபம் என பலவிதமான உணர்ச்சிகளை, முகபாவங்களை வெளிப்படுத்துவதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி. இதுபற்றி பைசா ஆய்வுக்குழு தலைவர் நிகோல் லாசரி கூறியதாவது: உலகம் முழுவதும் ரோபோக்கள், ஹியூமனாய்டு ரோபோக்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன.

இதில் வித்தியாசமாக ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்ற எங்கள் எண்ணம் தற்போது நிறைவேறி உள்ளது. இது 30 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி. ‘ஃபேஸ்’ ரோபோ தன் முகத்தில் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். நெற்றியை சுருக்கி கோபப்படும். வாயை அகல விரித்து சிரிக்கும். இதற்காக ரோபோவின் முகத்தில் 32 மினி மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஹைப்ரிட் இன்ஜின் ஃபார் பேஷியல் எக்ஸ்பிரஷன்ஸ் சிந்தசிஸ் என்ற சாப்ட்வேரை பயன்படுத்தியுள்ளோம்.

எந்த முகபாவத்தை வெளிப்படுத்த எந்த மோட்டார் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு, இந்த சாப்ட்வேர் உதவியுடன்தான் செயல்படுத்தப்படுகிறது. வெறுப்பு, கோபம், மகிழ்ச்சி போன்ற முகபாவங்கள் மட்டுமின்றி லேசாக வருத்தம் கலந்த மகிழ்ச்சி, வெறுப்பு கலந்த சிரிப்பு போன்ற முகபாவங்களையும் ஃபேஸ் ரோபாவால் வெளிப்படுத்த முடியும். எங்கள் டீமில் ஒருவரது மனைவியை ரோல் மாடலாக வைத்து ‘ஃபேஸ்’ ரோபோவை உருவாக்கியுள்ளோம். அவரது மனைவியின் ஜெராக்ஸ் போலவே ஃபேஸ் இருப்பதில் அவருக்கும் ரொம்ப ஆச்சரியம். இவ்வாறு நிகோல் கூறினார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply