இதோ அறிமுகமாகின்றது மிக மெலிதான ப்ளூடூத் கீபோர்ட்

Loading...

இதோ அறிமுகமாகின்றது மிக மெலிதான ப்ளூடூத் கீபோர்ட்தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியினால் இன்று அனைத்து தொழில்நுட்ப சாதனங்களும் அளவில் சிறியதாகிக்கொண்டே செல்கின்றன.

இது தவிர பெருமளவான சாதனங்கள் வயர் இணைப்பு அற்ற நிலையிலே செயற்படுத்தக்கூடியதாகவும் மாற்றப்பட்டுள்ளன.

இவற்றின் தொடர்ச்சியாகவே வயர்லெஸ் மவுஸ், கீபோர்ட் என்பனவும் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் தற்போது மிகவும் மெல்லிய தோற்றம் கொண்டதும், ப்ளூடூத் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடியதுமான கீபோர்ட் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Wekey எனும் இப் புதிய கீபோர்ட் ஆனது 6 மில்லி மீற்றர்கள் மட்டுமே தடிப்பினைக் கொண்டதாகவும், 95 கிராம் எடை கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கைப்பேசி, டேப்லட் என்பவற்றுடனும் இணைத்துப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் இந்த கீபோர்ட்டின் விலையனது 58 டொலர்கள் ஆகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply