இதயக்கோளாறு நீக்கும் சிறந்த வைத்தியராம் வெள்ளைப்பூண்டு

Loading...

இதயக்கோளாறு நீக்கும் சிறந்த வைத்தியராம் வெள்ளைப்பூண்டுபழங்காலம் முதல் சமையலில் முக்கிய இடம்பெற்று வரும் வெள்ளைப்பூண்டுக்கு மருத்துவக் குணம் அதிகம் உண்டு.

பக்கவாதம், வயிற்றுவலி போன்றவற்றுக்கு பூண்டு கைகண்ட மருந்து. மார்புச்சளியை கரைப்பதோடு, கபத்தை இளக்கி தூக்கத்தை தரக்கூடியது; செரிமானத்தையும் சீர்படுத்தக்கூடியது.

சளித்தொல்லை உள்ளவர்கள்… 10, 15 பூண்டுப்பற்களை உரித்து 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்து… பாதியாக வற்றியதும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், மிளகுப்பொடி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக கடைய வேண்டும்.

பிறகு தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து இரவு தூங்கப்போவதற்கு முன் அருந்தினால் மூக்கடைப்பில் தொடங்கி, நெஞ்சுச்சளி, கபம் போன்றவை சரியாகும்.

வாய்வுக்கோளாறினால் சிலருக்கு முதுகுப்பிடிப்பு, இடுப்புப்பிடிப்பு, கை-கால் வீக்கம் ஏற்படக்கூடும்.

அப்போது, வெள்ளைப்பூண்டினை தீயில் சுட்டு அதன் தோலை உரித்து சாப்பிடுவதால், பிரச்னைகள் விலகும். பூண்டினை ரசம், குழம்பு வைத்து சாப்பிடலாம்.

இதயக்கோளாறு, ரத்த அழுத்தம் உள்ளவர்களும், ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்திருப்பவர்களும் வெள்ளைப்பூண்டினை வேகவைத்து சாப்பிடுவதால் நாளடைவில் நோய்கள் கட்டுக்குள் வரும்.

இவைதவிர பூண்டுச்சாறுடன் தண்ணீர் கலந்து கிருமி தாக்கிய புண்களை, துடைத்து வந்தால்… புண்களில் வலி குறைந்து, சீழ் பிடிப்பது குறைந்து நாளடைவில் புண் ஆறும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply