ஆரோக்கியம் தரும் 6 பழச்சாறுகள்

Loading...

ஆரோக்கியம் தரும் 6 பழச்சாறுகள்பழங்கள் சாப்­பி­டு­வது உட­லுக்கு ஆரோக்­கி­ய­மா­னது என்­பது அனை­வரும் அறிந்­ததே.

அது­போன்று பழச்­சா­று­களும் உட­லுக்கு நோயெ­திர்ப்பு சக்­தியை வழங்­கு­கி­றது.


தர்­பூ­ச­ணிப்­பழச் சாறு :

கோடையின் தாக்­கத்­தி­லி­ருந்து விடு­பட நினைப்­ப­வர்கள் இப்­ப­ழத்தை உண்­பது இயல்பு.

ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்­ல­டைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளி­யேறும் போது தோன்றும் பல்­வேறு குறை­பா­டு­களும் நீங்கும்.

நீரி­ழிவு வியா­தியும் கட்­டுப்­படும். தர்­பூ­ச­ணிப்­பழச் சாறுடன் தேன் கலந்து உண்­டு­வர காய்ச்சல் குண­மாகும். சாறுடன் சம­அ­ளவு மோர் கலந்து அருந்த காமாலை குண­மாகும்.


அப்பிள் பழச்­சாறு :

அப்பிள் பழச்­சாறு உடற் சோம்பல், உடல்­க­ளைப்பு, வேளையில் ஆர்­வ­மின்மை போன்­ற­வற்றை குண­மாக்கும் தன்­மை­யுள்­ளது.

அப்பிள் பழச்­சா­றுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகி­ய­வற்றை கலந்து அருந்த ரத்த சோகை குண­மாகும்.

மேலும் கர்ப்­பிணி பெண்கள் இச்­சாற்றை அருந்த பிர­ச­வத்தின் போது இழக்கும் சக்­தியை பெறலாம்.

குழந்­தை­க­ளுக்கு அப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்­பலம் பெருகும்.


திராட்சைச் சாறு :

திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்­த­கு­றைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயு­கோ­ளா­றுகள், மூட்­டு­வலி ஆகி­யவை குண­மாகும்.

திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்­டு­வர ரத்த விருக்­தி­யுண்­டாகி உடல்­பலம் மிகும்.

நீரி­ழிவு வியா­திக்கு சர்க்­கரை சேர்க்­காத சாறு மிகவும் நல்­லது.


ஆரஞ்சுச் சாறு :

தொண்­டையில் புற்­றுநோய் கொண்டு எந்த உணவும் உட்­கொள்ள இய­லாத நிலை­யி­லுள்­ள­வர்­க­ளுக்கு ஆரஞ்­சுச்­சாறு அரு­ம­ருந்­தாகும்.

திட உணவு உட்­கொள்­ளாத வகையில் உள்­ள­வர்கள் இச்­சாற்றை துளி துளி­யாக அருந்தி உடல் நலம் பெறலாம்.இச்­சாற்றை அருந்­து­ப­வர்­க­ளுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதி­க­மா­கி­றது.

எளிதில் ஜீரணம் செய்ய தகுந்­தது. இரு­தய நோய்கள் எளிதில் குண­மாகும். டைபாய்டு, ஜுரம் ஆகி­யவை குண­மாகும்.

ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்­து­வதால் சிறுநீர் தாரா­ள­மாக வெளி­யேறும்.

சிறு­நீ­ரக குறை­பாடு குண­மாகும். குழந்­தை­க­ளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும்.


எலு­மிச்சைச் சாறு :

பாத்­தி­ரங்­களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலு­மிச்சை பயன்­ப­டு­வ­தில்லை. நமது உடலில் உள்ள அழுக்­கு­களை அகற்­றவும் பயன்­ப­டு­கி­றது.

எலு­மிச்சைச் சாறு அத்­துடன் தேன் கலந்து அல்­லது வெல்லம் கலந்து ஒரு பழத்­திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.

தொடர்ந்து அருந்­து­வதால் மூல நோய்கள், வயிற்­றுக்­க­டுப்பு, பித்­தத்தால் வரும் நோய்கள் ஆகி­யவை குண­மாகும்.

ஆனால் அள­வுக்­க­தி­க­மாக இதை அருந்­தும்­போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.

இள­நீ­ருடன் கலந்து அருந்­து­வதால் டைபாய்டு நோய் குண­மாகும். வெள்ளை வெங்­காய சாறுடன் கலந்து அருந்­து­வதால் மலே­ரியா நோய் குண­மாகும்.

வெள்ளை வெங்­கா­யத்­துடன் கற்­பூரம் கலந்து அருந்த எலு­மிச்சைச் சாறுடன் அருந்­து­வதால் காலரா குண­மாகும்.
உடல் களைப்­புகள், கை, கால் கனுக்­களில் வீக்கம் வலி ஆகி­யவை இருந்தால் எலு­மிச்­சைச்­சா­றுடன் விளக்­கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலி­யி­லி­ருந்து மீளலாம்.

பழுத்த வாழைப்­ப­ழத்­துடன் எலு­மிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்­கு­டலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்­கலாம்.


தக்­காளிச் சாறு :

தக்­காளிச் சாற்றை நாள்­தோறும் காலை­வே­ளையில் உண்­டு­வர உடல் வலிமை அதி­க­மா­வ­துடன் வேண்­டாத சதை­களும் குறையும்.

நீரி­ழிவு வியா­தியும் கட்­டுப்­படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும்.


தோல் நோய்கள் குணமாகும்

மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply