ஆயிரக்கணக்கான லேப்டொப் பேட்டரிகளை மீளப் பெறும் தொஷிபா

Loading...

ஆயிரக்கணக்கான லேப்டொப் பேட்டரிகளை மீளப் பெறும் தொஷிபாசிறந்த லேப்டொப் கணினிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் நிறுவனங்களுள் தொஷிபா நிறுவனமும் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிறுவனம் புதிதாக சந்தைப்படுத்திய சுமார் 100,000 வரையான பேட்டரிகளை உடனடியாக மீள பெறும் நடவடிக்கையில் களம் இறங்கியுள்ளது.

இதற்கு குறித்த பேட்டரிகள் அதிகளவில் வெப்பம் அடைவதாகவும் இதனால் அவை வெடித்து எரியக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகளவில் இருத்தலுமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த நிறுவனத்தின் தயாரிப்புக்களான Portege, Satellite, மற்றும் Tecra வகை லேப்டொப்களுக்குரிய பேட்டரிகளை மீளப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட லேப்டொப்களிலேயே இப் பிரச்சினை காணப்படுவதால் ஏனைய நாட்டினைச் சேர்ந்தவர்கள் தமது தொஷிபா லேப்டொப் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply