ஆப்பிள் ஸ்மார்ட்போன்களை பின்னுக்குத் தள்ளிய ஆண்ட்ராய்ட்

Loading...

ஆப்பிள் ஸ்மார்ட்போன்களை பின்னுக்குத் தள்ளிய ஆண்ட்ராய்ட்ஸ்மார்ட்போன் ஆபரேடிங் சிஸ்டத்தில் (ஓஎஸ்) ஆண்ட்ராய்ட் ஆதிக்கம் செலுத்தி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. போட்டி நிறுவனமான ஆப்பிள் பின்தங்கி விட்டது. இதுகுறித்து, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஆதிக்கம் செலுத்திய ஆண்ட்ராய்ட், 2வது காலாண்டான ஜூலையிலும் அதை தொடர்கிறது. குறிப்பாக, சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களின் வரவேற்பால் ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதே காலத்தில் ஆப்பிள் பின்தங்கியது. சாம்சங் தவிர எல்ஜி, மோட்டரோலா, எச்டிசி மற்றும் இந்திய தயாரிப்பான மைக்ரோமேக்ஸ் ஆகியவற்றின் ஸ்மார்ட்போன் மாடல்களும் ஆண்ட்ராய்ட் வெற்றி நீடிக்க காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply