ஆப்பிள் – சாம்சங் இடையே தொடரும் முடிவில்லா பனிப்போர்

Loading...

ஆப்பிள் – சாம்சங் இடையே தொடரும் முடிவில்லா பனிப்போர்ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களிடையே நெடுங்காலமாக ஒரு மிகப் பெரிய பனிப்போர் நிலவி வந்தது. ஆனால் தற்போது அது மறைமுகமாக நிலவி வரும் பனிப்போராக இல்லாமல் மிகப் பெரிய போராக உருவெடுத்திருக்கிறது.

சாம்சங் தாங்கள் செய்வதை அப்படியே காப்பி அடிப்பதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ஆப்பிள். அதற்கு சாம்சங் மறுப்பு தெரிவித்து வந்தது. நீதிமன்றத்தில் இந்த பிரச்சினையை அலசுவதற்கு முன்பு இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களுக்குள் ஒரு சுமூகமான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

அதன்படி அமெரிக்க மாஜிஸ்ட்ரேட் முன்பு இந்த இரண்டு நிறுவனங்களில் தலைமை மேளாலர்களும் பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர். எனினும் எந்தவித சுமூக தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை.

நேற்று நடந்த நீதிமன்ற விசாரனையில் எந்தவித தீர்ப்பும் எட்டப்படவில்லை என்று சாம்சங்கின் வழக்குரைஞர் கெவின் ஜான்சன் கூறியிருக்கிறார். இன்றும் இந்த வழக்கு சம்மந்தமான காரசார விவாதங்கள் நீதிமன்றத்தைக் கலங்கடிக்கும் என்று தெரிகிறது.

ஆனால் ஆப்பிள் சாம்சங் சண்டை முடிவுக்கு வருமா? அவர்களின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் போனியாகாமல் போனால் கண்டிப்பாக அவர்கள் அடித்துக் கொள்ளமாட்டார்கள் என்று நம்பலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply