ஆப்பிள் அல்வா

Loading...

ஆப்பிள் அல்வா
தேவையான பொருட்கள் :

ஆப்பிள் – 3
கோதுமை மாவு – 250 கிராம்
பால் – 250
நெய் – 150
சர்க்கரை – 500 கிராம்
முந்திரி – 10
பாதாம் – 10
ஏலகாய் பொடி – 1/2 ஸ்பூன்
கேசரிப் பவுடர் – 1/2 ஸ்பூன்


செ‌ய்யு‌‌ம் முறை :

* ஒரு கனமான வாணலியில் பாலை ஊற்றி அதில் ( துருவிய ) ஆப்பிளை போட்டு நன்கு வேகவிடவும்.

* சிறிது பாலில் கோதுமை மாவை கரைத்து நன்கு வெந்த ஆப்பிள் கலவையில் ஊற்றி கேசரிப் பவுடரையும் சேர்த்து கிளறவும்.

* அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிளறி.

* சிறிது இறுகியதும் அதில் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்

* அல்வா பதத்திற்க்கு வந்ததும் முந்திரி, ஏலகாய் பொடி, பாதாம் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.

* ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்து நமக்கு பிடித்த வடிவில் வெட்டி அத்துடன் நறுக்கிய முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

* சுவையான ஆப்பிள் அல்வா ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply