ஆன்லைன் விற்பனையில் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்

Loading...

ஆன்லைன் விற்பனையில் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்டியூவல் சிம் வசதி கொண்ட எச்டிசி டிசையர் விசி ஸ்மார்ட்போன் ஆன்லைன் விற்பனையில் பெறலாம். எச்டிசி நிறுவனம் டிசையர் விசி என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். 4 இஞ்ச் அகன்ற திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 25 ஜிபி ட்ராப்பாக்ஸ் க்ளவுடு சேவையையும் கொடுக்கும். டியூவல் சிம் வசதியினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் சிடிஎம்ஏ மற்றும் ஜிஎஸ்எம் வசதிக்கும் சப்போர்ட் செய்யும்.

எச்டிசி நிறுவனம் தொலை தொடர்பு சேவை நிறுவனமான டாடா டோக்கோமோ நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதனால் இந்த டிசையர் விசி ஸ்மார்ட்போனில் டாடா டோக்கோமோ (சிடிஎம்ஏ)போஸ்பெய்டு வாடிக்கையாளர்கள் 2 மடங்கு அதிக டாக் டைம் வசதியினை பெறலாம்.

ஐசிஎஸ் இயங்குதளம் மட்டும் இல்லாமல் இந்த டிசையர் விசி ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கியூவல்காம் எம்எஸ்எம் ஸ்னாப்டிராகன் கார்டெக்ஸ் ஏ-5 பிராசஸரினையும் கொண்டது.

ஜிபிஆர்எஸ் வசதியினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான வைபை தொழில் நுட்பத்தினையும கொடுக்கும். செகன்டரி கேமரா இதில் கொடுக்கப்படவில்லை. ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். 1,650 எம்ஏஎச் பேட்டரி வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைனில் கிடைக்கும். இதன் விலையும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டீல் வலைத்தளத்தில் எச்டிசி டிசையர் விசி ஸ்மார்ட்போன் ரூ. 21,999 விலையில் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply