ஆண் பெண் மத்தியில் வேறுபடும் மாரடைப்பு அறிகுறிகள்

Loading...

ஆண் பெண் மத்தியில் வேறுபடும் மாரடைப்பு அறிகுறிகள்ஆண், பெண் உடற்கூறு ஹார்மோன் மாற்றங்களினால், இதய நோய்கள், மாரடைப்பு போன்றவற்றின் அறிகுறிகளில் குழப்பங்கள் ஏற்படுகின்றன என சிகாகோவின் ரஷ் மருத்துவ மையத்தின் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த 10 பழக்கவழக்கங்கள் உங்கள் இதயத்தை பலவீனப்படுத்தும் என தெரியுமா? பொதுவாக, அதிகப்படியான நெஞ்சு வலி மற்றும் கழுத்து, தோள்பட்டை வலி போன்றவை தான் ஆரம்பக் கால இதய நோய் அறிகுறிகளாக தோன்றும்.

பெண்களின் சில சுழற்சி முறை ஹார்மோன்களின் காரணங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றால், இதய நோய் அறிகுறிகள் குறித்து பெண்கள் தெளிவற்று போகின்றனர் என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். முப்பது வயதுக்கு மேல் பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!

இதனால் இதய நோய் இருக்கிறதா என தெரியும் முன்னரே சிலர் உயிரிழக்கின்றனர் என மருத்துவர்கள் அச்சம் தெரிவிகின்றனர்…


நான்கில் ஒருவர்

நான்கில் ஒரு அமெரிக்கர் இதய நோய் பாதிப்புகள் மூலம் மரணமடைகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் 6,10,000 பேர் இதன் காரணமாய் உயிரிழக்கின்றனர் என அமெரிக்க நோய் பாதுகாப்பு மற்றும் தடுப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதய வலி

இந்த மூன்றில் இரண்டு பெண்களுக்கு இறக்கும் போது அதிகப்படியான நெஞ்சு வலியும், நெஞ்சை கசக்குவது போல அழுத்தமோ ஏற்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இரத்த அழுத்தம்

பெண்களின் இந்த சுழற்சி முறை ஹார்மோன்களால் அவர்களுக்கு அதிகமாக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இதனால் பொதுவாகவே அவர்கள் அசௌகரியமாக உணர்கிறார்கள்.


தெளிவற்ற அறிகுறிகள்

மாதவிடாய் காலத்திலும் இதுப் போன்ற வலிகள் ஏற்படுவதால், இவை மாரடைப்பிற்கான அறிகுறிகள் என பெண்களுக்கு தெளிவற்று போககிறது. இதனாலேயே, பெண்கள் தொடக்க காலத்திலேயே இதய நலன் சீர்கேடு பற்றி அறியாமல் போகின்றனர்.

இதனால் தான் பெண்கள் மத்தியில் இதய நோய் சார்ந்த மரணம் அதிகரித்து வருகிறது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply