ஆண்களே உங்கள் முடியை ஆரோக்கியமாகவும் திடமாகவும் வைத்திருக்க

Loading...

ஆண்களே உங்கள் முடியை ஆரோக்கியமாகவும் திடமாகவும் வைத்திருக்கஇன்றைய காலத்தில் ஆண்களுக்கு விரைவிலேயே வழுக்கை விழுந்து விடுகிறது.

இதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் தான். இப்படி வழுக்கை விழுவதற்கு முன்பு, முடி உதிர்தல் அதிகம் இருக்கும். முடியானது அதிகம் உதிர ஆரம்பித்தால், உடனே முடிக்கு போதிய பராமரிப்புக்களை கொடுத்து வர வேண்டும்.

ஆண்கள் முடியை திடமாகவும், ஆரோக்கியமா னதாகவும் வைத்துக் கொள்ள பின்வருவனவற்றை பின்பற்ற வேண்டும்.

இதைப் பின்பற்றினால் நிச்சயம் முடியானது வலுவடைந்து, வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம்.


இராசயனத்தை அதிகம் பயன்படுத்த வேண்டாம்

கூந்தலுக்கு இராசாயனம் கலந்த பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தினால், முடியின் வேர்களானது அழிய ஆரம்பித்து, முடி உதிர்தல் அதிகரித்து, நாளடைவில் வழுக்கை ஏற்பட்டுவிடும்.

எனவே அதிக அளவில் இராசயனம் கலந்த பொருட்களை பயன்படுத்த வேண்டாம்


ஷாம்பூ போட்டு குளிக்கவும்

ஷாம்பூவில் இராசயனம் இருந்தாலும், அதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்துவதால், எவ்வித தீமையும் ஏற்படாது.

எனவே ஆண்கள் தவறாமல் ஒரு நாள் விட்டு ஷாம்பூ போட்டு குளித்து வர வேண்டும்.

இதனால் தலையில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன், முடியானது மென்மையாக வும், மண்டையோட்டில் பொடுகு எதுவும் இல்லாமல் சுத்தமாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.


இறுக்கமான தொப்பிகள்

தலைக்கு எப்போதும் தொப்பியை அணிந்தவாறே இருந்தால், தலையில் அதிகம் வியர்த்து, மயிர்கால்களால் சுவாசிக்க முடியாமல், வலுவிழந்து பின் உதிர ஆரம்பித்து, வழுக்கையை கூட ஏற்படுத்திவிடும்.


தலைக்கு எண்ணெய் வையுங்கள்

வாரம் 2 முறை தலைக்கு தேங்காய் அல்லது ஒலிவ் எண்ணெய் பயன்படுத்தி, மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளித்து வந்தால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி ஆரோக்கியமாகவும், வலுவுடனும் இருக்கும்.


ஆரோக்கியமான வாழ்க்கை முறை

தினமும் நல்ல ஆரோக்­கியமான உணவுகளை உட்­கொண்டு, உடற்பயிற்சியை தவறாமல செய்து வந்து, கெட்ட பழக்கங்களை தவிர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

என்ன ஆண்களே இவற்றையெல்லாம் பின்பற்றுவீர்களா?

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply