ஆண்களே உங்கள் முக அழகை பாதுகாக்க சில எளிய வழிமுறைகள்

Loading...

ஆண்களே! உங்கள் முக அழகை பாதுகாக்க சில எளிய வழிமுறைகள்நாளிதழ்களில் இருந்து, நெட்வொர்க் தளங்கள் வரை எல்லா பக்கங்களிலும் பெண்களுக்கான அழகுப் பாதுகாப்புப் பற்றி மட்டுமே கூறிக் கொண்டிருக்கின்றனர்.
“ஏன் பசங்கள எல்லாம் பார்த்தா மனுஷங்க மாதிரி தெரியலையா..” ஏதோ இப்போது தான் ஷாருக்கான், விராட் கோலி போன்றவர்களை காட்டி சில ஆண்கள் அழகு சாதனப் பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது.
ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்களாக இருப்பினும் இந்த சுற்றுப்புற சீர்கேடு, மாசுப் பிரச்சனைகள் தலைத் தூக்கும் போது சில பல சிராய்ப்புகள் சருமத்தில் ஏற்படத் தான் செய்கிறது. அதை எளிதாகப் பட்டி, டிங்கரிங் பார்ப்பதற்கான எளிய வழிமுறைகள் தான் இங்கு ஆண்களுக்காகக் கூறப்பட்டிருக்கிறது.முகக் கொப்பளங்கள் அகற்ற

இந்த வெயில் காலத்தில் அடிக்கடி முகத்தில் கொப்பளங்கள் போல சில சிறு மேடுகள் எட்டிப்பார்க்கும் அதை குணப்படுத்த, ஹையலூரோனிக் அமிலம் மற்றும் க்ளைகோலிக் அமிலம் உள்ள மருந்துகள் உபோயோகப்படுத்துவது ஹையலூரோனிக் அமிலம் உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கும் மற்றும் க்ளைகோலிக் அமிலம் கொப்பளங்கள் குணமடைய உதவும்.முக எரிச்சல்

வைட்டமின் பி 5 மற்றும் ஆஸியாடிக் அமிலம் உங்கள் சருமத்தின் சிதையுற்றப் பகுதியை சீரமைத்து மற்றும் நச்சினைப் போக்கி, எரிச்சல் குறைய உதவுகிறது.கரும்புள்ளிகள் அகற்ற

கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற படிவத்தை உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கின்ற இடத்தில் தடவி வந்தால், கரும்புள்ளிகள் விரைவில் மறைந்துவிடும்சுருக்கங்கள் குறைய

ரெடினால் என்பது வைட்டமின் ஏ-வில் இருக்கும் ஒரு கலவை ஆகும். இது உங்களது சரும சுருக்கத்தை போக்க வெகுவாக உதவுகின்றன. முட்டை, மீன், பச்சை மற்றும் மஞ்சள் வகை காய்கறிகளில் இதன் சத்து அதிகமாக கிடைக்கிறது.மாசு மரு மறைய

பெப்டைட்ஸ் பயன்படுத்துவதனால், மாசு மருவினால் ஏற்பட்ட மடிப்புகள் மறையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply