ஆடி அறிமுகப்படுத்திய புதிய சொகுசு கார் முதல் டெலிவரி அபிஷேக் பச்சனுக்கு

Loading...

ஆடி அறிமுகப்படுத்திய புதிய சொகுசு கார்…முதல் டெலிவரி அபிஷேக் பச்சனுக்குரூ.1.10 கோடியில் புதிய ஏ8 எல் சொகுசு செடான் காரை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது ஆடி. முதல் கார் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டது.

புதிய ஆடி ஏ8 எல் சொகுசு காரில் 350 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.8 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 4.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

இதுதவிர, 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 6.3 லிட்டர் டபிள்யூ12 எஞ்சின் ஆகிய எஞ்சின் மாடல்களிலும் கிடைக்கும்.

8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும் இந்த புதிய காரில், ஆடியின் டிரேட்மார்க் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

5.5 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும் திறன் கொண்ட இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 250கிமீ வேகத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது.

4.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஏ8 எல் சொகுசு கார் முதலாவதாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு டெலிவிரி கொடுத்துள்ளது ஆடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply