ஆசஸ் அறிமுகம் செய்யும் புதிய‌ அல்ட்ராபுக்குகள்

Loading...

ஆசஸ் அறிமுகம் செய்யும் புதிய‌ அல்ட்ராபுக்குகள்ஆசஸ் நிறுவனம் தனது எல் வரிசையில் இரண்டு புதிய அல்ட்ராபுக்குகளைக் களமிறக்கி இருக்கிறது. இந்த அல்ட்ராபுக்குகளுக்கு எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்030ஆர் மற்றும் எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்056ஆர் என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.

3ஜி மற்றும் இன்டல் ஐ3 கோர் ப்ராசஸருடன் வரும் எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்030ஆர் அல்ட்ராபுக் ரூ.46,999க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்டல் ஐ5 ப்ராசஸருடன் வரும் எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்056ஆர் அல்ட்ராபுக் ரூ.52,999க்கு விற்கப்படுகிறது.

இந்த இரண்டு லேப்டாப்புகளும் 15.6 இன்ச் எச்டி எல்இடி பேக்லைட் க்ளேர் டிஸ்ப்ளே மற்றும் உயர்தர எஸ்எஸ்எச்+எச்டிடி சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளன.

மேலும் ஆசஸ் தனது எப் வரிசையில் ஒரு புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. 2ஜி ப்ராசஸர் கொண்ட இந்த லேப்டாப் ரூ.35,999க்கு விற்கப்பட இருக்கிறது.

இந்த லேப்டாப் ஐஸ்கோல் தொழில் நுட்பம் கொண்டிருப்பதால் இந்த லேப்டாப் அதிக சூடு அடையாது. அதுபோல் இந்த லேப்டாப்பில் சோனிக் மாஸ்டர் லைட் வசதியும் உள்ளதால் இதில் ஆடியோவும் பக்காவாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply