அழகிற்கு அழகு சேர்க்க சில பயனுள்ள குறிப்புகள்

Loading...

அழகிற்கு அழகு சேர்க்க சில பயனுள்ள குறிப்புகள் 1. தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.

2. தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

3. தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.

4. தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள்.

5. கறிவேப்பிலையின் இளம் இலைகளை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.

6. தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை இருக்காது.

7. இரண்டு டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு நான்கு சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

8. தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை பப்பாளி நீக்குகிறது. இதற்கு பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் பூசி வர வேண்டும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply